OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Latest OTT Releases This Week : ஓடிடியில் இந்த வாரம் இறங்கும் தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். 

Latest OTT Releases This Week : வாரா வாரம், ஓடிடி தளங்களில் புதுப்புது படங்களும், தொடர்களும் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால் இப்படி பல படங்கள் மக்கள் அவர்களின் இல்லங்களிலேயே பார்க்கும் அளவிற்கு பட ரிலீஸ்கள் இருக்கின்றன. தியேட்டரில் வெளியாகி பெரிதும் வரவேற்பினை பெறாத படங்களும் கூட, ஓடிடி தளங்களில் வெளியான பின்பு நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

1 /15

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படம், ஆகஸ்டு 8ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. 

2 /15

7 ஜி திரைப்படம்: சோனியா அகர்வால் நடித்திருந்த 7ஜி திரைப்படம் ஆஹா தளத்தில் வெளியாகிறது. இதை, ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

3 /15

டர்போ:  மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டர்போ’ மலையாள படத்தை, சோனி லிவ் தளத்தில் நாளை பார்க்கலாம்.

4 /15

தி இன்ஸ்இகேட்டர்ஸ்: இந்த ஆங்கில திரைப்படத்தை, ஆப்பிள் டிவியில் நாளை (ஆகஸ்டு 9) பார்க்கலாம். 

5 /15

ரொமான்ஸ் இன் தி ஹவுஸ்: இந்த கொரியன் தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

6 /15

ஃபிர் ஹாய் ஹசீன் தில்ரூபா: இந்த இந்தி திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

7 /15

நாதன்ன சம்பவம் மலையாள படத்தை, மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

8 /15

மிஷன் க்ராஸ்: இந்த கொரியன் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

9 /15

லவ்லி: லவ்லி கன்னட படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில், நாளை முதல் காணலாம். 

10 /15

லோலோ அண்ட் தி கிட் ஆங்கில படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் காணலாம்.

11 /15

லைஃப் ஹில் கயி: இந்த இந்தி தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் காணலாம். 

12 /15

குட் சடி இந்தி படத்தை, நாளை முதல் ஜியோ சினிமா தளத்தில் பார்க்கலாம். 

13 /15

எக்ஸுமா கொரியன் த்ரில்லர் படத்தை பிஎம்எஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

14 /15

சந்து சாம்பியன்: சந்து சாம்பியன் திரைப்படத்தை இந்தி திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

15 /15

அ க்வையட் ப்ளேஸ் டே ஒன்:  A Quiet Place Day One சர்வைவல் த்ரில்லர் ஆங்கில படத்தை, பிஎம்எஸ் தளத்தில் ஆகஸ்டு 9 முதல் பார்க்கலாம்.