கேரளா சேலையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி... இந்த ஒரு காஸ்ட்யூமை செய்ய இத்தனை நாட்களா..!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) திருமணத்தையொட்டி நீதா அம்பானியின் ஆடைகள் இணையத்தில் வைரலாகி வந்த சூழலில், தற்போது அவர் பாரம்பரியமிக்க கேரளா சேலையை உடுத்திய புகைப்படமும் வைரலாகி வருகின்றன.

  • Jul 24, 2024, 09:48 AM IST

நீதா அம்பானி (Nita Ambani) எப்போதும் பாரம்பரியமிக்க கைத்தறி சேலையை உடுத்த விரும்புவார் என்பது கவனிக்கத்தக்கது. 

 

1 /8

கடந்த வாரம் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா கோலாகலமாக நடந்தது.   

2 /8

மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கிய அவர்களின் திருமண விழா, ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற்றது.  

3 /8

திருமணத்திற்கு முன்பாகவே, மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரிலும், மே மாதம் வெளிநாட்டில் சொகுசு கப்பலிலும் இரண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. திருமணத்திற்கு 10 நாள்களுக்கு முன்பிருந்து சங்கீத் உள்பட பல சடங்குகளும் நிகழ்வுகளும் நடைபெற்றன.  

4 /8

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களிலும், திருமண விழாவிலும் இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். பல்வேறு பாடகர்கள் தங்களின் இசை நிகழ்ச்சிகளையும் அங்கு மேற்கொண்டனர்.   

5 /8

இந்த திருமண விழாவில் பிரபலங்கள் ஒருபுறம் இருக்க அம்பானி குடும்பத்தாரும் ஆடைகளில் அசத்தினர். குறிப்பாக, முகேஷ் அம்பானியின் மகன் இஷா அம்பானி (Isha Ambani), மருமகள் ஸ்லோகா மேத்தா (Shloka Mehta) உள்ளிட்டோரின் ஆடைகளும் வைரலாகின.  

6 /8

அதிலும் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மனைவி நீதா அம்பானியும் அவரது ஆடைகளில் கலக்கினார், அவையும் வைரலாகின. இந்நிலையில், நிதிா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடந்த குரு பூர்ணிமா வழிபாடு நிகழ்ச்சியில் நீதா அம்பானி வெள்ளை மற்றும் கோல்டன் நிறம் கொண்ட கேரளாவின் பாரம்பரியமிக்க கசவு சேலையை அணிந்திருந்ததும் தற்போது வைரலாகி உள்ளது.  

7 /8

9 இன்ச் கோல்டன் பார்டர் கொண்ட அந்த சேலையை கேரளாவின் நெசவாளர்கள் சுமார் 20 நாள்களுக்கு மேல் பணியாற்றி நீதா அம்பானிக்காக பிரத்யேகமாக வடிவமைத்து  கொடுத்துள்ளனர். நீதா அம்பானி (Nita Ambani) எப்போதும் பனராஸ் வகை சேலையை உடுத்தும் நிலையில், ஒரு மாற்றமாக கேரளா சேலையை உடுத்தியுள்ளார்.  

8 /8

கேரளாவின் பாரம்பரியமிக்க இந்த கசவு சேலை (Kerala Kasavu Saree) என்பது அதில் இடம்பெறும் யானை உள்ளிட்ட எளிமையான டிசைன்களுக்காக பெயர் பெற்றது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இந்த கைத்தறி சேலையானது மக்களால் தொடர்ந்து உடுத்தப்பட்டு உள்ளது. இதில் பருத்தி முதல் டாப்-என்ட் வகை சேலை வரை உள்ளது. அதிகபட்சம் 1.5 லட்சம் விலை வரும் என்கின்றனர்.