இன்னும் 4 நாட்களில் சனி ஜெயந்தி 2023: இந்த ராசிகளுக்கு மட்டும் பம்பர் ஜாக்பாட்

Shani Jayanti 2023: இந்த ஆண்டு சனி ஜெயந்தி வரும் மே 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதியானது மே 18 ம் தேதி இரவு 09.42 மணிக்கு துவங்கி, மே 19 ம் தேதி இரவு 09.22 வரை உள்ளது.

சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் இந்த நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற 19 ஆம் சனி ஜெயந்தி ஆகும். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கருணை காட்டுவார், பண மழை, ஜாக்பாட் பெறுவார்கள் என்பதை  தெரிந்துக்கொள்வோம்.

1 /5

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். விரைவில் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழப் போகிறது. பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.  

2 /5

கடக ராசி: கடக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் குறையும். குடும்பம் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகளில் மகத்தான வெற்றி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள்.  

3 /5

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் பணி பாராட்டப்படும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.  

4 /5

மகர ராசி: மகர ராசிக்கு சுப பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பணிகள் பாராட்டப்படும். ஆனால், இந்த நேரத்தில் உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.  

5 /5

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு பண பலன்களை தரவுள்ளது. சனிபகவானின் அருள் உங்களுக்கு இருக்கும். கடின உழைப்பு, அன்பு, மரியாதை ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள்.