‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்
இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார்
“அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர்
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இவர் 1885-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
நம் மத்தியில் தற்போது மகாத்மா காந்தி இல்லையென்றாலும், அவரது நினைவுச்சின்னங்கள் நாட்டு மக்களை விட்டு விலகவில்லை!
இன்றும்கூட, வன்முறையற்ற, சமாதான இந்தியாவின் உதாரனமாக மகாத்மா காந்தியினை கூறுவது வழக்கமாக உள்ளது!