"போகுமிடம் வெகு தூரமில்லை" படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

இந்திய அளவில் டாப் ஹிட் 4  படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ள "போகுமிடம் வெகு தூரமில்லை"  இப்படம் வெளியான சில நாட்களிலே 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை பாராட்டும் விதத்தில் படக்குழுவினரை விஜய் சேதுபதி நேரில் சென்று பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது இப்படம் மிகவும் பிரபலமடைந்து வைரலாகிவருகிறது. மேலும் அறிவோம்.

1 /8

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பாராட்டுக்களைக் குவித்து பல புதிய சாதனைகளைப் படைத்து வரும் இப்படத்தினைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார். 

2 /8

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4  இல் இடம்பிடித்த  "போகுமிடம் வெகு தூரமில்லை"   திரைப்படம். 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.  

3 /8

 "போகுமிடம் வெகு தூரமில்லை" அக்டோபர் 8 ஆம் தேதி  ஒடிடி தளம் அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழியிலும் பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்தது. 

4 /8

ஷார்க் 9 பிட்சர்  சார்பில்  சிவா கிலாரி தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் எடுக்கபட்ட மாபெரும் வெற்றிபடமாக அமைந்துள்ளது.

5 /8

மைக்கேல் K ராஜா இவரது திரைப்பயணத்தில் இதுவரை தான் எட்டாத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து  நடித்தது குறிப்பிடத்தக்கது.

6 /8

"போகும் இடம் வெகு தூரம் இல்லை" திரைப்படம் கதாபத்திரம் மாறுபட்டு மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

7 /8

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.   

8 /8

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து,அவர்களுடன் படம் குறித்து உரையாடி,  விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.