விராட் கோலி கடந்த ஆண்டில் மட்டும் இத்தனை சாதனைகளா?

விராட் கோலி 2023 ஆம் ஆண்டில் மட்டும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என்பதை பார்க்கலாம். 

 

1 /8

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராட் கோலி, டெஸ்ட, ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் தனது அற்புத பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உலகையை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.  

2 /8

2023ஆம் ஆண்டில் விராட் கோலி 36 இன்னிங்ஸில், 66 சராசரியுடன் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 8 சதங்கள், 10 அரை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.  

3 /8

ஒரு நாள் கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸ் விளையாடி 1,377 ரன்களை எடுத்துள்ள கோலி, 6 சதம், 8 அரை சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 671 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.  

4 /8

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கார். இதுவரை இல்லாத அளவில் ஒரு உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.  

5 /8

2023ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 117 ரன்கள் அடித்ததன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் சாதனையை கோலி முறியடித்தார். நியூசிலாந்துக்கு எதிராக கோலி அடித்த சதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 50வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.  

6 /8

2023-ல் 2000 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்ளை 7 முறை கடந்த வீரர் என்ற உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் குமாரா சங்கக்காரா இந்த சாதனையை 6 முறை நிகழ்த்தியிருந்தார். தற்போது கோலி அதை முறியடித்திருக்கிறார்.  

7 /8

கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தபோது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.  

8 /8

21வது முறையாக தொடர் நாயகன் விருதை கைப்பற்றி, அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்றவர் என்ற சாதனை, வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதமடித்தவர், ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அதிக முறை அடித்த வீரர், இந்தியாவின் வெற்றிக்கான பங்களிப்பில் அதிக முறை 50க்கும் அதிகமான ரன்களை அடித்த வீரர் என்ற சாதனைகளை எல்லாம் விராட் கோலி படைத்திருக்கிறார்.