மவுசு குறைந்த மணிரத்னம்.. இவர்களே 2023 ஆண்டின் டாப் 5 தமிழ் இயக்குனர்கள்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக மாஸ் காட்டி வசூல் வேட்டையில் முன்னிலையில் இருக்கும் டாப் 5 இயக்குனர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாகவே இருந்துள்ளது. இதற்கு காரணம் இந்த ஆண்டு வெளியான தரமான படங்களே. அதிலும் அறிமுக இயக்குனர்களின் படங்கள் இந்த ஆண்டு சக்கை போடு போட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 

1 /5

டாப் 5 இயக்குனர்களில் இந்த ஆண்டு நம்பர் 1 இடத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, அதனுடன் இப்படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து, அதுமட்டுமின்றி இந்த படம் அதிக வசூல் செய்த கோலிவுட் படம் என்கிற சாதனையையும் படைத்தது.  

2 /5

டாப் 5 இயக்குனர்களில் இந்த ஆண்டு நம்பர் 2 இடத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தட்டிச் சென்றுள்ளார். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய்யின் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

3 /5

இந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் சரிவை சந்தித்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் வசூல் சாதனை படைத்து முதலிடத்தை பெற்றிருந்த மணிரத்னத்துக்கு, இந்த ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியாகியும் மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது.  

4 /5

இந்த பட்டியலில் இயக்குனர் எச்.வினோத்துக்கு நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு இவரது இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.  

5 /5

டாப் 5 இயக்குனர்கள் லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பிடித்துள்ளவர். இவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அமோக வெற்றியை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.