குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..

Yoga Asanas For Kids : யோகாசனம் என்பது, அனைவரும் செய்யக்கூடிய ஒன்றாகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம். அது என்னென்ன தெரியுமா? 

Yoga Asanas For Kids : ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் பயன்படும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, யோகாசனம். இதில், ஒரு சில ஆசனங்களை குழந்தைகளும் செய்யலாம், பெரியவர்களும் செய்யலாம். குழந்தை பருவத்திலேயே இது குறித்த அறிவை போதித்தால் குழந்தைகள் வளர்ந்த பினும் பயபெறுவர். அப்படி, குழந்தைகளுடன் நாம் செய்யக்கூடிய யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா? 

1 /8

உலகளவில் யோகா செய்பவர்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். இதன் அருமை தெரிந்தவர்கள், யோகாவை தினசரி செய்கின்றனர். இதனால் உடல் வலுவாவதுடன் ஃப்ளெக்சிபில் ஆகவும் இருக்கும். எடையையும் பாலன்ஸ் செய்யலாம்.

2 /8

வீர பத்ராசனம் 1: வீர பத்ராசனம் ஆசனத்தை நின்று கொண்டு செய்ய வேண்டும். இது, மார்பு, கழுத்து, வயிறு,, தோள்பட்டை ஆகியவற்றை வலுவாக்க உதவும். தொடை மற்றும் கணுக்காலையும் வலுவாக்கவும் இது உதவும். 

3 /8

வீர பத்ராசனம் 2: விரபத்ராசனம் முதுகு வலியை நீக்க செய்யப்படும் யோகாப்பயிற்சிகளுள் ஒன்றாகும். இது, இடுப்பு எலும்பை வலுவாக்க மற்றும் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

4 /8

வஜ்ராசனம்: வஜ்ராசனம் யோகா பயிற்சியை உட்கார்ந்து கொண்டு செய்யலாம். குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் ஆசனங்களுள் இதுவும் ஒன்ரு. இது, நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, செரிமான கோளாறுகளையும் சரிசெய்யும். 

5 /8

உஸ்த்ராசனம்: உஸ்த்ராசன யோகாசனம் மனதை சாந்தப்படுத்தும் பயிற்சிகளுள் ஒன்றாகும். இது, பின்முதுகு வலியை நீக்கும் உடற்பயிற்சியாகும். நுரையீரலையும் இந்த உடற்பயிற்சி வலிமையாக்கும்.

6 /8

சப்த வஜ்ராசனம்: சப்த வஜ்ராசனம், உடலில் வாயுத்தொல்லையை நீக்க உதவும். செரிமான கோளாறை சரிசெய்ய இந்த ஆசனத்தை செய்யலாம். இது, உடல் தசைகளை வலுப்படுத்தவும் உதவும். 

7 /8

தனுராசனம்: தனுராசனம், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்யப்படும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதை தினசரி செய்வதால் முதுகுத்தண்டு வலிமையடையும். 

8 /8

பத்தா பத்மாசனம்: இந்த ஆசனத்தை செய்வதால், முட்டி மற்றும் தோள்பட்டைகள் வலுபெறும். கைகள் மற்றும் முதுகுப்பகுதியை வலுப்படுத்த இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.