ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் (Harvard University) பேராசிரியர் அவி லோப் (Professor Avi Loeb) பூமியை நோக்கி விண்கற்கள் (Meteors) அல்லது சிறுகோள்கள் (Asteroid) வருவது பொதுவான நிகழ்வு அல்ல என்று கூறியுள்ளார். பூமியை நோக்கி வரும் இவை அனைத்தும் வேற்று கிரகவாசிகள் வளிமண்டலத்தில் வீசிய குப்பைகள் என்று சொல்கிறார் பேராசிரியர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளைப் பற்றிய புதிய விஷயங்கள் வெளிவருகின்றன. சில சமயங்களில் வேற்று கிரகவாசிகள் ரேடியோ சிக்னல்கள் மூலம் (Aliens Radio Signals) விஞ்ஞானிகளை தொடர்பு கொள்கின்றனர். சில சமயங்களில் வானத்தில் பறக்கும் தட்டுகள் (Flying Saucers) காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


தற்போது ஹார்வர்ட் பேராசிரியர் அவி லோப் வேற்று கிரகவாசிகள் (Aliens) பற்றி கூறியிருக்கும் மிகப்பெரிய வெளிப்பாடு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி அவர் என்ன தான் சொல்லியிருக்கிறார்?


Also Read | வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக ex-Israeli general பகீர் தகவல்


ஹார்வர்ட் பேராசிரியர் வேற்றுகிரகவாசிகள் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள்


பூமியை நோக்கி விண்கற்கள் (Meteors) அல்லது சிறுகோள்கள் (Asteroid) வருவது பொதுவான நிகழ்வு அல்ல என்று கூறியுள்ளார். பூமியை நோக்கி வரும் இவை அனைத்தும் வேற்று கிரகவாசிகள் வளிமண்டலத்தில் வீசிய குப்பைகள் என்று சொல்கிறார் பேராசிரியர்.
 
பேராசிரியர் அவி லோப் யார் தெரியுமா?


பேராசிரியர் அவி லோப் ஹார்வர்ட் வானியல் துறையின் தலைவராக உள்ளார். அவர் சமீபத்தில் தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தின் பெயர் 'Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth' என்பதாகும். இந்த புத்தகத்தில், விண்வெளியில் இருந்து வரும் பளபளப்பான கற்கள், பூமிக்கு வெளியே உயிர் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றன என்று அவர் அறுதியிட்டுக் கூறுகிறார்.


Also Read | விண்வெளியில் வேறு கிரகத்தில் உள்ளவர்கள் நமக்கு செய்திகளை அனுப்புகிறார்களா?


பேராசிரியர் 2017 நிகழ்வை சுட்டிக்காட்டுகிறார்  


பேராசிரியர் அவி லோப் (Avi Loeb) தனது புத்தகத்தில் 2017 ஆம் ஆண்டில் விண்வெளியில் கொட்டப்பட்ட குப்பைகளைப் பற்றி பேசியிருக்கிறார். அவை நமது சூரிய மண்டலத்தில் சுற்றி பிரகாசமான பாறை போல் ஆனது. 2017 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, ஒரு பொருள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. அது பின்னர் 2017 செப்டம்பர் 9-ஆம் தேதியன்று சூரியனுக்கு அருகில் சென்றது என்று லோப் கூறுகிறார்.


வேகா நட்சத்திரம் மீண்டும் பூமிக்கு வந்தது


வேகா ஸ்டார் (Vega Star) பூமியிலிருந்து 25 ஒளி ஆண்டுகள்  தொலைவில் இருப்பதாக பேராசிரியர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வெள்ளி (Venus) கிரகத்திற்கு அருகில் மணிக்கு 58900 மைல் வேகத்தில் கடந்து சென்றது வேகா நட்சத்திரம். பெகாசஸ் (Pegasus) குழுவுக்குச் சென்ற வேகா ஸ்டார் அக்டோபர் 7 அன்று பூமிக்கு திரும்பியது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் பூமியில் எதுபோன்ற விளைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.


Also Read | உலகில் அங்கே இங்கே என தோன்றிய உலோக மர்ம தூண் இப்போது இந்தியாவிலும்..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR