பர்பேட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்துள்ளது.  இதற்காக அவர் நீண்ட நாட்களாக சிறிது சிறிதாக சில்லறையாக காசுகளை சேமித்து வந்துள்ளார்.  அதில் போதுமான அளவு தொகை சேர்ந்தவுடன் அந்த நாணயங்களை வைத்து தற்போது அவர் ஷோரூமில் ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்கியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | துணிக்கடையில் துணிகரம்: டிரையல் ரூமில் மறைந்திருந்தது யார்? வைரல் வீடியோ


யூடியூபரான ஹிராக் ஜே தாஸ் என்பவர் சில புகைபடங்களுடன் இதனை பேஸ்புக்கில் பதிவிட்டதையடுத்து  இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்து தற்போது வைரலாகி இருக்கிறது.  மேலும் அந்த புகைப்படங்களுடன் அவர்  "ஒரு கனவை நிறைவேற்ற அதிகளவில் பணம் தேவைப்பட்டாலும், பணத்தை சிறிது சிறிதாக சில நேரங்களில் சேமிப்பதன் மூலம், நம் கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்ற முடியும்" என்றும் கேப்ஷனாக எழுதினார்.



இந்த வைரல் வீடியோவில், ஷோரூமிற்குள் மூன்று ஆண்கள் ஒரு சாக்கு நிறைய நாணயங்களை எடுத்துச் செல்வதைக் காணமுடிகிறது.  அந்த நபர்கள் ஷோரூமிற்கு உள்ளே அந்த சாக்கு பையை தூக்கிக்கொண்டு வந்தவுடன் அதனை பிரித்து அதிலுள்ள நாணயங்களை பிளாஸ்டிக் கூடைகளில் கொட்டுகின்றனர், கிட்டத்தட்ட 5 பிளாஸ்டிக் கூடைகளில் அந்த சாக்கிலிருந்த நாணயங்கள் நிறைந்து விடுகிறது.  அதன் பிறகு ஷோரூமில் பணிபுரியும் ஊழியர்கள் அதில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை எண்ணுகின்றனர்.  அதனை தொடர்ந்து அந்த கடைக்காரர் சில ஆவணங்களில் கையெழுத்திட்டு ஸ்கூட்டரின் சாவியை வாங்கிக்கொள்வதுடன் இந்த வீடியோ முடிகிறது.  



இந்த வீடியோ இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளதோடு, பல ஆயிரம் பார்வைகளை கடந்து ட்ரெண்டாகி வருகிறது.  இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை லைக் செய்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.  ''சிறுதுளி பெருவெள்ளம்'' என்கிற பழமொழிக்கேற்றார் போல் இவர் சிறுக சிறுக சேமித்து வைத்த நாணயங்கள் இன்று இவரின் பெரிய கனவை நிறைவேற்ற உதவிகரமாய் அமைந்து இருக்கிறது.


மேலும் படிக்க | மைதானத்தில் புழுதியைக் கிளப்பி, இணையத்தில் பட்டையைக் கிளப்பிய சண்டை: வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR