புதுடெல்லி: வினோதமான விஷயம் என்றாலும் உண்மையான விவகாரம் தான் இது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்ட புகைப்படம் 'வெளிப்படையான பாலியல் வெளிப்பாடு' என்று கூறி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புகைப்படத் தொகுப்பை முடக்கியது ஃபேஸ்புக்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல ஊடகமான பிபிசியின் ஒரு அறிக்கையின்படி, 400 புகைப்படங்களில் எந்தவொரு "ஆபத்தான" உள்ளடக்கமும் இல்லை என்று இங்கிலாநது அணி வீரர் மைக் ஹால் (Mike Hall) கூறுகிறார். ஆனால் அவற்றை சமூக ஊடக மேடையில் விளம்பரங்களாகப் பயன்படுத்த அவர் முயற்சித்ததைத் தொடர்ந்து பேஸ்புக் அவற்றை அகற்றியது.  


ஆச்சரியத்தக்க வகையில் பேஸ்புக் நீக்கிய 400 புகைப்படங்களில், நிற்கும் பசு ஒன்றின் புகைப்படம், உயரமான கட்டடம் ஒன்று, பட்டாசு வெடிக்கும் புகைப்படம் ஆகியவை அடங்கும். படங்களை தடை செய்ய பேஸ்புக் வழங்கிய காரணங்கள் என்ன தெரியுமா? “ஆயுதங்களை ஊக்குவித்தல்”, “வெளிப்படையான பாலியல்” உள்ளடக்கம் என பட்டியலிடப்பட்டிருக்கிறது.


Also Read | IND vs ENG: தனக்கான சொர்கத்தை சென்னை மைதானத்தில் உருவாக்கிய ஜோ ரூட் 


பேஸ்புக்கின் விளம்பரக் கொள்கைகள் "வயது வந்தோர்" தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதை கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி தவறான பக்கத்தில் இருப்பது வினோதமான ஒன்றாக கூறப்படுகிறது.


இருப்பினும், புகைப்படங்கள் "தவறாக தடைசெய்யப்பட்டுள்ளன" ("restricted in error”) என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரிய பேஸ்புக் விளம்பரங்களை மீண்டும் பதிவேற்றியது.  


2018 ஆம் ஆண்டில் சவுத்தாம்ப்டனில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் அலெஸ்டர் குக் கலந்துக் கொண்ட இறுதி கிரிக்கெட் டெஸ்ட் தொடராக நினைவுகூரப்படுகிறது. பேஸ்புக் தடை செய்த கேலரியில் ரூட், குக், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் என பல இங்கிலாந்து வீரர்கள் இருந்தனர்.  


Also Read | Road Safety World Series T20: சச்சின் முதல் கவாஸ்கர் வரை கிரிக்கெட் ஜாம்பவான்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR