புதுடெல்லி: சாலை பாதுகாப்பு உலக தொடர் டி 20போட்டியின் தொடக்க பதிப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நான்கு போட்டிகளுக்குப் பிறகு அது நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் இப்போது ராய்ப்பூரில் புதிதாக கட்டப்பட்ட ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த மைதானத்தில் 65,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
மார்ச் 2 முதல் மார்ச் 21 வரை நடைபெறவிருக்கும் சாலை பாதுகாப்பு உலக தொடர் டி 20 போட்டியில் இந்திய கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்துக் கொள்வார்கள்.
வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா, முத்தையா முரளிதரன் என பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Also Read | IND vs Eng: இங்கிலாந்து அணி அபார வெற்றி, வீணானது விராட் கோலியின் அரைசதம்
"சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா, பிரட் லீ, திலகிரத்ன தில்ஷன், முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா என ஐந்து நாடுகளின் பல ஜாம்பவான்கள் விளையாடுவதை பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தை இந்த போட்டி ஏற்படுத்திக் கொடுக்கும். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்திர டி 20 கிரிக்கெட் போட்டி, பழைய வீரர்களின் புது அவதாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கான களம்” என்று சாலை பாதுகாப்பு உலக தொடர் டி 20 போட்டி தொடர்பான ஊடக அறிக்கை கூறுகிறது.
"கிரிக்கெட் நாட்டில் அதிகம் போற்றப்படும் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் உன்னதமானவர்களாக பார்க்கப்படுவதால், இந்த லீக் போட்டிகள், சாலைகளில் மக்களின் நடத்தை குறித்த மனநிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read | IND vs Eng: முதல் டெஸ்டில் அபார மைல்கல்லை எட்டி சாதனை செய்தார் Ishant Sharma
சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் கிரிக்கெட் பிரபலங்கள் ராய்ப்பூருக்கு வருவது தங்கள் மாநிலத்திற்கு கிடைத்த மரியாதை என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்தார்.
"சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது மிகவும் நல்ல விஷயம், மேலும் இந்திய சாலைகளில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு நபர் இறந்து விடுகிறார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்" என்று அவர் அறிக்கையில் மேற்கோளிட்டுள்ளார்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக நம்பிக்கையுடன் இந்தத் தொடர் தொடங்கப்பட்டது, ஆனால் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக போட்டிகளைத் தொடர முடியவில்லை என்று சாலை பாதுகாப்புத் தொடரின் நிறுவனர் ரவி கெய்க்வாட் கூறினார்.
Also Read | சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
"நாங்கள் மீண்டும் போட்டிகளை நடத்துகிறோம் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கடினமான காலங்களில் முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல ஒன்றிணைந்துள்ள வீரர்கள், அதிகாரிகள், எங்கள் ஒளிபரப்பு கூட்டாளிகள் மற்றும் எங்கள் பெரிய பணிக்குழு அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்" நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு உலகத் தொடர் என்பது மகாராஷ்டிராவின் சாலை பாதுகாப்பு துறை முன்னெடுத்துள்ள முன்முயற்சியாகும், இது தொழில்முறை மேலாண்மை குழு (பிஎம்ஜி) உடன் இணைந்து தொடரின் ஆணையாளராக இருக்கும் சுனில் கவாஸ்கர் மற்றும் பிராண்ட் தூதராக இருக்கும் டெண்டுல்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது.
Also Read | இந்துக்களின் பெரும்பாலான கோவில்கள் சேதமடைந்துள்ளன, Pakistan ஆணையம் சாடல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR