IND vs ENG: தனக்கான சொர்கத்தை சென்னை மைதானத்தில் உருவாக்கிய ஜோ ரூட்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் விளையாடிய 17 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண் அவருக்கு எப்போதுமே நல்ல அனுபவத்தை தருகிறது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் விளையாடிய 17 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண் அவருக்கு எப்போதுமே நல்ல அனுபவத்தை தருகிறது.

தனது அதிரடி ஆட்டத்தை இலங்கையில் தொடங்கிய ஜோ ரூட், அதை இந்தியாவிலும் தொடர்கிறார். ரன் மழையை விளாசித் தள்ளும் ஜோ ரூட், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை இந்தியாவில் அனுபவிக்கிறார். இரட்டை சதம் அடித்து  இந்தியாவிற்கு எதிரான அற்புதமான சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் 226 மற்றும் 186 என அற்புதமான ஸ்கோர்களை பதிவு செய்த ஜோ ரூட், இந்தியாவில் 218 என்ற அபார ரன்களை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மொத்தம் 578 ரன்கள் எடுத்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் என்ற அருமையான நிலையை எட்டியிருக்கிறார் இருக்கிறார் Root.

Also Read | Road Safety World Series T20: சச்சின் முதல் கவாஸ்கர் வரை கிரிக்கெட் ஜாம்பவான்கள்

1 /5

218 என்ற ரன்களை எடுத்த ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 17 போட்டிகளில் 1,679 ரன்களை எடுத்துள்ளார். தனது ஐந்தாவது இரட்டை சதத்தை சென்னையில் பதிவு செய்த பேட்ஸ்மேன் இப்போது இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62.19 என்ற ரன் ரேட்டை வைத்துள்ளார்.  (Image: England Cricket)

2 /5

இந்தியாவில் விளையாடிய 7 போட்டிகளில் 842 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவிற்கு 2012 இல் வந்து போட்டியில் களம் இறங்கிய ஜோ ரூட்டுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது.  (Image: England Cricket)

3 /5

ரூட் இந்தியாவில் பேட்டிங் செய்ய களம் இறங்கினால், அவரது சராசரி அதிகரிக்கிறது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் 218 மற்றும் 40 ரன்கள் எடுத்த ரூட், ஏழு போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 800க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்   (Image: England Cricket)

4 /5

இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடிய ஜோ ரூட், மொஹாலி, ராஜ்கோட், விசாக், மும்பை மற்றும் நாக்பூரில் விளையாடியுள்ளார், இரட்டை சதம் எடுப்பதற்குக் முன்பு அவர் 78, 93, 128, 93 மற்றும் 98 என்ற அருமையான ஸ்கோர்களை பதிவு செய்துள்ளார்.    (Image: England Cricket)

5 /5

20 சதங்கள் மற்றும் 49 அரைசதங்களுடன், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 8500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சர் அலெஸ்டர் குக் (Sir Alastair Cook) மற்றும் கிரஹாம் கூச் (Graham Gooch) ஆகியோருக்குப் பின்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்திற்கான அதிக ரன்களின் பட்டியலில் ரூட் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். குக் 12,472 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார், கூச் 8900 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். (Image: England Cricket)