மாமியார் வீட்டில் களி தின்னும் கொடூர மருமகள்! சித்திரவதை அனுபவிக்கும் 80 வயது பாட்டி வீடியோ
Domestic Violence Video Viral: 80 வயது மாமியாரை அடித்து உதைக்கும் கேரள பெண்! பள்ளி ஆசிரியைக்கு இவ்வளவு வன்முறையா? கைது செய்யப்பட்ட மருமகள்
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த மஞ்சு தாமஸ் என்ற பெண், 80 வயது மாமியாரை அடித்தும், திட்டியும் துன்புறுத்திய வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட, 37 வயதான மஞ்சு தாமஸ் என்ற பெண், தனது கணவரின் 80 வயது தாயை கொடூரமாக தாக்கிய வீடியோ எக்ஸ் வலைதளத்தில் வைரலானது. வீடியோவை பார்த்த போலிசார், கருணையே இல்லாத மருமகள் மஞ்சு தாமஸை கைது செய்தனர்.
வைரலான ஒரு வீடியோவில், மஞ்சு தாமஸ் மற்றும் இரண்டு மைனர் குழந்தைகள் அமர்ந்திருந்த அறைக்குள் 80 வயதான எலியம்மா தாமஸ், நுழைவதைக் காணலாம். வீட்டிற்குள் வந்த அந்த மூதாட்டியை அறையை விட்டு வெளியே செல்லுமாறு கூறும் மஞ்சு தாமஸ், கீழே தள்ளுவதைக் காணலாம்.
மேலும் படிக்க | சொதப்பிய பைக் ஸ்டண்ட், பறந்து விழுந்த இளைஞர்: திகிலூட்டும் வைரல் வீடியோ
கீழே விழுந்த வயதான பெண்மணி, எழுவதற்கு சிரமப்பட்டபோது, மாமியாரை கேவலமாக திட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பார்த்தவர்களை அதிர்ச்சியுறச் செய்யும் வீடியோ, @sabiyashaikh91 என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மஞ்சு தாமஸ், மாமியாரை உடல் ரீதியாக தாக்குவதை வீடியோ காட்டுகிறது. மாமியாரை கொடூரமாக தாக்கும் மஞ்சு தாமஸின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | பட்டையைக் கிளப்பும் பாப்பாவின் ஓய் பாபா டான்ஸ்! லேடி பிரபுதேவா இவர் தானா?
கைது செய்யப்பட்ட மஞ்சு தாமஸ் மீது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் பிரிவு 24 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 308 (கொலை முயற்சி) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீடியோவை எடுத்தது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தாக்குதல் சம்பவத்தின் போது வீடியோ எடுத்த நபர், இப்படி செய்ய வேண்டாம் என்று சைகை காட்டுவதை வீடியோவைப் பார்த்தால் புரிந்துக் கொள்ளலாம். இது முதல் முறை நடைபெற்ற சம்பவம் அல்ல, மருமகள், தனது மாமியாரை நீண்டகாலமாக துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் கேரள மனித உரிமை ஆணையம் தானாக வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொல்லம் மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு ஆணைய உறுப்பினர் வி கே பீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டி, பாதிக்கப்பட்டவரின் கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட மஞ்சு தாமஸ், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் என்று மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் முதியோர்களை துஷ்பிரயோகம் செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது. வயதானவரை மோசமாக நடத்தும் பெண்மணி, தனது குழந்தைகள் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட பெரியதாக நினைக்கவில்லை என்பதும், அவர் ஆசிரியராக பணிபுரிகிறார் என்பதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ