வைரல் வீடியோ: கட்டணம் தொடர்பாக பயணிக்கும் கால்டாக்சி ஓட்டுநருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், முன்பதிவு செய்த பயணத்திற்கு டிரைவர் தன்னிடம் ரூ.100 கேட்பதை எதிர்க்கும் பெண், செயலியில் கட்டணம் ரூ. 95 தான் இருக்கிறது ஏன் 5 ரூபாய் அதிகம் கேட்கிறாய் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த கால்டாக்ஸி டிரைவர் ஆக்ரோஷத்துடன் பதில் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அந்தப் பெண் வீடியோவாக பதிவு செய்யத் தொடங்கியபோது டிரைவருக்கு கோபம் சுர்ரென்று ஏறுகிறது. குரல் உயர்த்தி சண்டை போடும் டிரைவருக்கு, சளைக்காமல் அந்த பெண்ணும் பதில் சொல்கிறார். மேலும், அந்த பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது குறித்து சொல்லும் டிரைவர், "கார் கூடுதலாகச் சென்றால், நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டும்" என்று ஓட்டுநர் திரும்பத் திரும்பக் கூறுவதைக் கேட்கலாம்.
வீடியோ முடியும் வரை இரு தரப்பினரும் தங்கள் வாதத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவத்திற்கு டிரைவருடன் தொடர்புடைய கேப் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்
"பயணிக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம். ஓட்டுநரின் நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம், மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தீர்க்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. எங்களுடைய அர்ப்பணிப்புள்ள குழு இந்த விஷயத்தை உள்ளக விசாரணையின் மூலம் முழுமையாக மதிப்பாய்வு செய்யும். இதைப் பற்றிப் பதிவிட்டவர் தனிப்பட்ட முறையில் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் பகிரக்கூடிய விவரங்கள் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். நன்றி” என கால்டாக்சி நிறுவனம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
lafdavlog (@lafdavlog) என்ற கணக்கில் இருந்து பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் இரு வேறு கருத்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | மிரட்டிய மிக்ஜாம் புயலில் மின்னிய மீட்புக்குழு: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ
சிலர் ஐந்து ரூபாய்க்காக இவ்வளவு பெரிய சண்டை தேவையா என்று கேள்வி எழுப்பினால், வேறு சிலர், பெண் பயணியை ஆதரித்து ஓட்டுநரின் நடத்தையை சாடியுள்ளனர். "செயலியில் உள்ள கட்டணத்தைக் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கொடுட்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று கட்டணத்தை விட அதிகமாக ஒருவர் 5 ரூபாய் கொடுத்தால் நாளை கேப் டிரைவர் எல்லோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்." என்று ஒரு பயனர் எழுதினார்.
ஆனால், மற்றொருவரின் கருத்து மாறுபட்டிருக்கிறது. "கார் தண்ணீரில் ஓடாது, ஓட்டுநரும் வாழ வேண்டாமா? வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் துல்லியமான இடங்களைத் தருவதில்லை, இதனால் கட்டணத்தில் சிறிது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது தான்”. எது எப்படியிருந்தாலும், 5 ரூபாய் அதிகமாக கொடுப்பது அந்த பயணியின் உரிமை என்பதும், ஐந்து ரூபாய்க்காக கேள்வியே கேட்கக்கூடாதா என்றும் பலர் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | காத்திருந்து முதலைக்கு ஸ்கெட்ச் போட்ட பாம்பு! சாப்பாட்டு பிரச்சனை ஓவர்! வைரல் வீடியோ
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ