எருமை மீது அருமையாக சவாரி செய்த இளைஞர்! ஏன் தெரியுமா? வைரல் வீடியோவை பாருங்கள்!

Bull Ride Viral Video: ஒருவர், வினோதமான ஹெல்மெட்டை அணிந்து கொண்டு எருமை மீதேறி பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 14, 2023, 08:23 PM IST
  • ஒரு இளைஞர், எருமை மாட்டின் மீது பயணம் செய்துள்ளார்.
  • கூடவே முயல் ஹெல்மட்டையும் அணிந்திருக்கிறார்.
  • ஏன் தெரியுமா? இதோ வைரல் வீடியோ!
எருமை மீது அருமையாக சவாரி செய்த இளைஞர்! ஏன் தெரியுமா? வைரல்  வீடியோவை பாருங்கள்! title=

நாம் வாழும் இவ்வுலகம், நாளாக நாளாக தொழில்நுட்பங்களின் வருகையினாலும் பெருக்கத்தினாலும் நிலையான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. முன்னர், பொழுதுபோக்கிற்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்த சமூக வலைதளங்கள், தற்போது பலருக்கு வாழ்வாதாரமாகவே இருக்கிறது. இதன் மூலம் பிரபலமாகும் பலருக்கு சினிமாவில் நடிக்கவும், இன்னும் பெரிய இடத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. ஒரு சிலர், ஒரே வீடியோ மூலம் ‘ஓஹோ’வென உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகின்றனர். அப்படி ஒரு நபர், வைரலாக வேண்டும் என்பதற்காக ஒரு செயலை செய்துள்ளார். அது என்ன தெரியுமா?

வைரலான வினோத மனிதர்..

டெல்லியில் அவ்வப்போது ஏதாவது சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஒரு இளைஞர், எருமை மாட்டின் மீது முயல் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு பயணிப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கலாய்க்கும் வகையில் அந்த இளைஞர் இந்த செயலை செய்திருக்கிறார்.

மேலும் படிக்க | பேருந்தில் ஏறி கிலி காட்டிய குரங்கு: நம்ப முடியாத வைரல் வீடியோ

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவின் ஆரம்பத்தில் எருமை மீது கயிறை பிடித்தவாறு அந்த இளைஞர் பயணிக்கின்றார்.  ‘எதில் பயணித்தாலும் பாதுகாப்பு முக்கியம் பிகிலு..’ என்பது போல, எருமை மீது பயணித்தாலும் தான், முயல் போன்ற தலைக்கவசத்தை அணிந்து வருகிறார். இந்த வீடியோவின் கேப்ஷனிலும் ‘அதிகரித்து வரும் பெட்ரோல் விலையின் விளைவுதான் இது..’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒருவர் இந்த ரோட்டில் இப்படி எருமை மீது பயணிப்பது என்னவோ சாதாரண நிகழ்வு போல, பல வண்டிகள் இந்த இளைஞரை கடந்து செல்கிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bull Rider (@bull_rider_077)

கடந்த மாதம் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது 1 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேலான லைக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும், இதற்கு 3.8 மில்லியன் வியூஸ்களும் சென்றுள்ளது. 

நெட்டிசன்களின் ரியாக்ஷன்..

எந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானாலும் அதற்கு கருத்து சொல்வதற்கென்றே நிறைய நெட்டிசன்கள் உலா வருகின்றனர். அதே போல, இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனிலும் சிலர் அப்படி தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், ‘எருமையின் அருமை தெரியாதவனே...நீ அமர்ந்து பயணிப்பதற்காக அது படைக்கப்படவில்லை..’ என்று கடிந்துள்ளார். இன்னொருவர், ‘இது போல மிருகங்களை வதை செய்ய வேண்டாம்..’ என்று கேட்டுள்ளார். இன்னொருவர், ‘அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை கொடுங்கள்’ என கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ, பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுக்கும் வகையில் இருப்பதாக ஒரு சிலர் கமெண்ட் செய்து தங்களது கருத்துக்களை பதிவிட்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... புலிக்கு தண்ணி காட்டிய வாத்து... மூக்கில் விரல் வைத்த நெட்டிசன்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News