நடுரோட்டில் அடித்துக்கொண்ட ஜோடி.. பரிதாபமாய் நின்ற குழந்தை: பதற வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு ஒரு ஜோடி சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குழந்தையை பற்றி அவர்களுக்கு ஞாபகம் இருந்ததாகவே தெரியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2023, 07:58 AM IST
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ சீனாவை சேர்ந்தது என கூறப்படுகிறது.
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான என்ஸ் -இல் @NoCapFights என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இணையாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
நடுரோட்டில் அடித்துக்கொண்ட ஜோடி.. பரிதாபமாய் நின்ற குழந்தை: பதற வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

பெற்றோரின் அன்பு ஒரு குழந்தைக்கு மிகப்பெரிய சொத்து போன்றது. ஆனால் பல சமயங்களில் பெற்றோருக்கு இடையே ஏற்படும் சண்டைகள் குழந்தைகளின் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இந்த தாக்கம் குழந்தையின் மனதில் வாழ்நாள் முழுதும் பதிந்து விடுகின்றது. பல இடங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை என விவாகரத்து செய்துகொண்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால், இது குழந்தைகளின் மனதில் ஒரு வடுவாக மாறி விடுகின்றது. இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் பல வித மன உளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். 

வீட்டில் எப்போதும் தாயும் தந்தையும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை பார்க்கும் குழந்தைகள் மன ரீதியாக வெகுவாக பாதிக்கபப்டுகிறார்கள். சில ஜோடிகள் வீட்டில் மட்டுமல்லாமல் வெளி இடங்களிலும் சண்டை போட்டிக்கொள்வதில் எந்த தயக்கத்தையும் காட்டுவதில்லை. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக உடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதை கண்ட இணையவாசிகள் கொதித்தெழுந்துள்ளனர். 

இந்த வீடியோவில் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு ஒரு ஜோடி சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குழந்தையை பற்றி அவர்களுக்கு ஞாபகம் இருந்ததாகவே தெரியவில்லை. சண்டையில் மிகவும் மூழ்கிப்போன் இருவரும் தாங்கள் நடு ரோட்டில் இருப்பது பற்றியும் தங்களுடன் தங்கள் குழந்தை இருப்பது பற்றியும் துளியும் கவலைகொள்ளவில்லை. 

ஒரு பிசியான சாலையில் பல வாகனங்கள் சென்று கொண்டிருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண்கிறோம். அப்போது திடீரென ஒரு வாகனம் நிற்கிறது. அதிலிருந்து வெளியே வந்த நபர் பின் சீட்டில் அமர்ந்திருந்த தனது மனைவியை காரை விட்டு வெளியே இழுக்கிறார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்த மக்கள், இந்த ஜோடியைப் பற்றி கடுமையான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் திடீரென காரில் இருந்து கீழே இறங்குவதை காணமுடிகிறது. அதன் பிறகு பின் கேட்டை திறந்து மனைவியை கையை பிடித்து இழுக்கிறார். அவரது மனையியுடன் அவர்களது குழந்தையும் உள்ளது. இருவரும் சாலையில் விழுகிறார்கள். குழந்தை கத்தி அழத்தொடங்குகிறது.

ஆனால் பரஸ்பர கோவம் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் குழந்தையின் நினைவே வரவில்லை. கார் கதவை சாத்திவிட்டு கணவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்யத் தொடங்குகிறார். ஆனால், அப்போது மனைவி எழுந்து சென்று அவரிடம் சண்டை இடுகிறார். இதற்கிடையில் குழந்தை கத்தி அழுதுகொண்டே எழுந்து நிற்கிறது. பாவம் அதற்கு ஒன்றும் புரியவில்லை. 

மேலும் படிக்க | பட்டையைக் கிளப்பும் பாப்பாவின் ஓய் பாபா டான்ஸ்! லேடி பிரபுதேவா இவர் தானா?

சாலையில் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் இதை வேடிக்கை பார்க்கிறார்கள். இதற்கிடையில் குழந்தை அழுவதைக் கண்டு ஒரு நபர் முன் வந்து குழந்தையை துக்கிக்கொள்கிறார். கணவன் மனைவி இருவரும் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல வாகனங்கள் வந்து போகும் சாலையில் இப்படி குழந்தையை கண்டுகொள்ளாமல் விடுவது எவ்வளவு ஆபத்தானது என்பது அவர்களுக்கு புரியவில்லை. குழந்தையின் உயிருக்கே கூட இது ஆபத்தாக முடியலாம். இதை காணும் நமக்கு நெஞ்சம் பதபதைக்கிறது.

நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ சீனாவை சேர்ந்தது என கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான என்ஸ் -இல் @NoCapFights என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸும் ஷெர்சும் கிடைத்துள்ளன. இணையாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பலர் அந்த ஜோடியை சரமாரியாக திட்டி வருகிறார்கள். பலர் இந்த பெற்றோரை கடுமையாக சாடியுள்ளனர். 

மேலும் படிக்க |  சொதப்பிய பைக் ஸ்டண்ட், பறந்து விழுந்த இளைஞர்: திகிலூட்டும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News