எலி பிடிக்க போய் பல்பு வாங்கிய பூனை: வைரல் வீடியோ
Funny Animal Video: இந்த வீடியோவில், டிவியில் ஓடும் ஒரு நிகழ்ச்சியில், நாய்க்கும் எலிக்கும் இடையே நடந்த மோதலைப் பார்த்து பூனை ஒன்று டிவி மீது குதிப்பதை காண முடிகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள் எங்காவது ஒன்று கூடும் போது, அவற்றுக்கு இடையில் சண்டை வருவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். அதுவும், இவை இரண்டும் எலியும் பூனையுமாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
இந்த கியூட் சண்டைகள் காண்பவர்களை சிரிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதைப் பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த வீடியோவில், டிவியில் ஓடும் ஒரு நிகழ்ச்சியில், நாய்க்கும் எலிக்கும் இடையே நடந்த மோதலைப் பார்த்து பூனை ஒன்று டிவி மீது குதிப்பதை காண முடிகின்றது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூனை ஒன்று சோபாவில் அமர்ந்து சுவரில் பொருத்தப்பட்டிருந்த டிவியை பார்த்துக் கொண்டிருக்கிறது. டிவியில் ஒரு வீடியோ ஒளிபரப்பாகிறது. அதில் நாய் ஒரு சிறிய எலியைப் பிடிக்க முயற்சிக்கிறது. ஆனால் எலி மீண்டும் மீண்டும் ஒரு சிறிய துளைக்குள் சென்று விடுகிறது. அதன் விளைவாக நாயால் எலியை பிடிக்க முடியவில்லை.
மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை
இந்த காட்சியில் மூழ்கிப்போகும் பூனை, தான் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு டிவி நிகழ்ச்சி என்பதை மறந்துவிடுகிறது. எலியை பார்த்ததும் பூனை அந்த காட்சியில் மூழ்கிவிடுகிறது. நாய் பலமுறை எலியை பிடிக்க முயற்சிக்கிறது. ஆனால், அதனால் முடியவில்லை. எலி பிடிப்பதில் கில்லியான பூனையால் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை.
பூனையின் ஆர்வமும் அதிகரிக்கிறது. ஆர்வ மிகுதியால், எலியைப் பிடிக்கும் நோக்கத்தில் பூனை தொலைக்காட்சி மீது குதிக்கிறது. அதன் பிறகு என்ன? டிவி மீது பூனை மோதி கீழே தரையில் விழுகிறது.
பூனை பல்பு வாங்கிய வீடியோவை இங்கே காணலாம்:
மேலும் படிக்க | படமெடுக்கும் பாம்பை பார்த்திருக்கலாம்: நடிக்கும் நாகப்பாம்பை பார்த்ததுண்டா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR