‘சாமி சாமி’ பாட்டுக்கு மாஸா டான்ஸ் ஆடி மேடையை அதிர வைத்த பாட்டி: ரசிக்கும் நெட்டிசன்கள்

Old Woman Pushpa Dance: மாஸாக டான்ஸ் ஆடி கிளாஸாக கலக்கும் இந்த பாட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 5, 2022, 04:05 PM IST
  • சாமி சாமி படத்துக்கு டான்ஸ் ஆடி கலக்கிய பாட்டி.
  • மாஸ் நடனம் வைரல் ஆனது.
  • ஒரே நாளில் வைரல் ஆனார் சூப்பர் பாட்டி.
‘சாமி சாமி’ பாட்டுக்கு மாஸா டான்ஸ் ஆடி மேடையை அதிர வைத்த பாட்டி: ரசிக்கும் நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீபகாலமாக, வயதானவர்கள் உற்சாகமாக நடனமாடும் பல வைரல் வீடியோக்கள் வெளிவந்து வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபித்துள்ளன. குழந்தைத்தனமும், இளமையும் நம் மனதில்தான் இருக்கிறது, வயதில் இல்லை என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். 

இப்போது, ​​​​புஷ்பா படத்தில் வரும் ‘சாமி சாமி’ பாடலுக்கு ஒரு வயதான பெண்மணி நடனமாடும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. நடன மேடையை அதிர வைக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த தெலுங்கு பிளாக்பஸ்டர் புஷ்பா - தி ரைஸ் இணையத்தை இன்னும் கலக்கி வருகின்றது. 

புஷ்பா படம் சமூக ஊடகங்களை முழுவதுமாக ஆக்கிரைத்துள்ளது. இப்படத்தின் பாடல்களை பாடியும், வசனங்களுக்கு லிப் சிங்க் செய்தும், படத்தின் வசனங்களை வைத்து மீம்களை உருவாக்கியும் பலர் படத்தின் மீதான தங்கள் பிரியத்தை காட்டி வருகிறார்கள். புஷ்பா பாடல்கள் இடம்பெறாத திருமண நிகழ்வுகளோ கொண்டாட்டங்களோ தற்போது இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த படத்தின் பாடல்கள் அனைவரது உள்ளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. 

வீடியோ-வில், மிகவும் ஃபிட்டாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படும் ஒரு வயதான பெண்மணிம் ஒரு திருமணத்தில், புஷ்பா படத்தில் வரும் ‘சாமி சாமி’ பாடலுக்கு தன் சொந்த ஸ்டைலில் நடமாடுகிறார். மனதில் எந்தவித சந்தேகமும் அச்சமும் இல்லாமல் அவர் படு கூலாக ஆடுவது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. 

மேலும் படிக்க | அடிச்சிடுவேன் பாத்துக்கோ: டென்ஷன் ஆன குரங்கின் வைரல் வீடியோ 

அனைத்து தயக்கங்களையும், கூச்சத்தையும் கைவிட்டு, அவர் பாடலில் மூழ்கி நடனமாடுவது வீடியோவில் நன்றாகத் தெரிகிறது. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் விருந்தினர்கள், அந்த பெண்மணி ஆடும் நடனத்தை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 

மாஸாக டான்ஸ் ஆடி கிளாஸாக கலக்கும் இந்த பாட்டியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் giedde என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையதளவாசிகளும் அவரது நடனத்தை விரும்பி பார்க்கிறார்கள். பாட்டியின் இந்த அசால்டான மாஸ் நடனத்துக்கு பல வித கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. 

பாட்டியின் மாஸ் டான்ஸ் வீடியோவை இங்கே காணலாம்:

சுகுமார் இயக்கிய, அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த தெலுங்கு திரைப்படம் புஷ்பா பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது இந்த படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: இது என ஏரியா... ராஜநாகத்தை மூர்க்கமாக தாக்கும் கீரி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News