பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காடுகளின் உலகம் ஆபத்தான விலங்குகளால் நிறைந்துள்ளது. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. சில விலங்குகளின் அளவு சிறியதாக இருந்தாலும், அவை மிகப்பெரிய இரையையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும். இவற்றில், சிங்கம் வேட்டையாடுவதை பார்த்தாலும் மிக ஆச்சரியமாக இருக்கும். தன்னுடைய பலத்தால் இது கனமான எருமையையும் எளிதில் கட்டுப்படுத்துகிறது. எனினும், பாம்பு ராஜ நாகத்தை வேட்டையாடுவதை பொதுவாக யாரும் பார்த்திருக்க முடியாது. 


ஆனால், இப்போது இப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களின் வெவ்வேறு தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராட்சத பாம்பு ஒன்று வேட்டையாடுவதற்காக ராஜ நாகத்தின் பொந்திற்குள் நுழைவதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | ‘ப்ப்ப்பா....பாம்பு’: இணையத்தை பற்ற வைக்கும் பாம்புகளின் காதல், வீடியோ வைரல்


ராஜ நாகத்தை வேட்டையாட பொந்தில் நுழைந்த பாம்பு 


தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ராட்சத பாம்பு ஒன்று இரை தேடி அங்கும் இங்கும் செல்வதை காண முடிகின்றது. பின்னர் அதன் பார்வை பாம்பின் பொந்தின் மீது விழுகிறது. தனது இரை உள்ளே தான் இருக்கிறது என்பதை அது தெரிந்துகொள்கிறது. பல அடி நீள ராஜ நாகம் பொந்தின் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. ராட்சத பாம்பு ராஜ நாகத்தின் தலையை பிடித்து வெளியே இழுக்கிறது. அதன் பிறகு வீடியோவில் நடப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. 


பாம்புகளுக்கு இடையில் நடக்கும் திக் திக் வீடியோவை இங்கே காணலாம்


 



இதில், ராட்சத பாம்பு ராஜ நாகத்தை தலையை பிடித்து அழுத்தி பின்னர் உயிருடன் விழுங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. சில நிமிடங்களிலேயே பாம்பு ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கி விடுகிறது. இந்த வீடியோ snake._.world என்ற இன்ஸ்டாகிராமில் வீடியோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. மிக அரிய இந்த நிகழ்வை பற்றி இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | கிஸ் கொடுத்த பாம்பு: பூனையின் வேற லெவல் ரியாக்ஷன், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ