வைரல் வீடியோ: விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குரங்குகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். மனிதர்கள் செய்யும் பல வேலைகளை பார்த்து குரங்குகளும் அப்படியே காப்பி அடிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் மிகவும் லூட்டி அடிக்கும் வேடிக்கையான உயிரினங்கள். மிருகக்காட்சிசாலைகளிலோ அல்லது வேறு இடங்களிலோ இவற்றின் செயல்களைப் பார்க்கும்போது, ​​நாம் அடிக்கடி வயிறு குலுங்க சிரிப்பதுண்டு. ஆனல், சில சமயம் இவற்றை பார்த்து நாம் திகைத்துப்போவதும் உண்டு. தற்போது இணையத்தில் குரங்குகளில் குறும்புத்தனம் பற்றிய ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் குரங்குகளின் கூண்டை அடித்து அவற்றை தொந்தரவு செய்ய, அதற்கு பதிலடி கொடுக்கும் குரங்கு ஒன்று அவரை பாடாய் படுத்துகிறது.


இந்த வீடியோவில், ஒரு மிருகக்காட்சிசாலையில் உள்ள குரங்குகள் கூண்டை பல முறை அடித்த ஒரு பெண்ணின் கூந்தலை, குரங்குகள் பிடித்து இழுத்து தாக்கும் திகிலூட்டும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதற்கு சுமார் 100,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | அழகாய் கொஞ்சி ஆசையாய் கிஸ் செய்த லங்கூர் குரங்கு: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ 


வைரலான இந்த வீடியோவில், ஒரு பெண் குண்டில் அடைக்கப்பட்டுள்ள குரங்குகளை பலமுறை கேலி செய்வதைக் காண முடிகின்றது. இதனால் குரங்குகள் கடுப்பகின்றன. உடனடியாக, ஒரு குரங்கு அந்த பெண்ணின் கூந்தலை பிடித்து வலுவாக இழுக்கிறது. அந்த பெண் குரங்கின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். 


இன்னும் சிலரும் அவருக்கு உதவ முயல்கின்றனர். ஆனால், இதில் எந்த பலனும் இல்லை. இறுதியாக எப்படியோ அந்த பெண் குரங்கின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார். எனினும், அவர் திரும்பிச் செல்லும்போது குரங்கு அவரது கூந்தலை மீண்டும் பற்றிக்கொள்கிறது. எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோம் என தன்னை விடுவித்துக்கொண்டு அவர் ஓடி விடுகிறார். 


குரங்கின் கோவத்தைக் காட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்த பெண் குரங்குகளை கிண்டல் செய்து அவற்றை தொந்தரவு செய்ததை வலுவாக விமர்சித்து வருகிறார்கள். சிலர் இது உடனடி கர்மா என கமெண்ட் செய்துள்ளார்கள். 
‘குரங்கு செய்தது சரிதான்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ’இந்த சம்பவம் வேடிக்கையாக இருப்பதோடு, திகிலூட்டும் வகையிலும் உள்ளது’ என ஒருவர் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ