ஏ ஆர் ரஹ்மானின் சிநேகிதனே சிநேகிதனே பாடலை பாரதநாட்டியம் மூலம் பிரபலப்படுத்திய டான்ஸர்
`சிநேகிதனே சிநேகிதனே` பாடலுக்கு பரதநாட்டியமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ஜிகா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ர் அலைபாயுதே படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வெளியான பாடல்.
Viral Video: 'சிநேகிதனே சிநேகிதனே' பாடலுக்கு பரதநாட்டியமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ஜிகா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ர் அலைபாயுதே படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வெளியான பாடல்.
வெளியானபோதே பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது திரைப்படம். திரைப்படத்தில் மாதவன் மற்றும் ஷாலினியின் அற்புதமான கெமிஸ்ட்ரியும் இந்த பாடலுக்கு அழகூட்டியது.
அந்தப் பாடலுக்கு பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஒருவர் பரதநாட்டியம் ஆடிய வீடியோ மீண்டும் சிநேகிதனே பாடலை அனைவரையும் முணுமுணுக்க வைக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களில் இந்தியப் பாடல்கள் இப்போது உலக அளவில் பிரபலமடைந்து வருகின்றன.
அதிலும் இந்தியப் பாடல்களின் கவர்ச்சியான வரிகளும், சுறுசுறுப்பான இசையும் அனைவரையும் கவர்கிறது.
அதுமட்டுமல்லாமல், RRR, Pushpa: The Rise’ போன்ற பிரபலமான இந்தியத் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களை வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வைரலாக்குவதைக் காணலாம். அத்தகைய ரசிகர்களில் ஒருவர் ஜிகாமானு, ஜிகா என்று குறிப்பிடப்படும் அவர் இந்தியப் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில், ஜிகா ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடலுக்கு பரதநாட்டிய நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இருவருடன் சேர்ந்து சிநேகிதனே பாடலுக்கு பரதநாட்டிய நடனத்தை ஆடுகிறார். அவர் அணிந்திருக்கும் மஞ்சள் மற்றும் கருப்பு உடையும் அனைவரையும் கவர்கிறது. "நான் பரதநாட்டிய நடனத்தை முயற்சித்தேன்" என்ற தலைப்புடன் அவர் பகிந்துள்ள வீடியோ வைரலாகிறது.
மேலும் படிக்க | கோப்ராவிற்கு கிஸ் கொடுத்த நபர்; அடுத்து என்ன நடந்தது
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…
இதே அழுத்தம் அழுத்தம்…
இதே அணைப்பு அணைப்பு…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே…
சிநேகிதனே… சிநேகிதனே ரகசிய சிநேகிதனே… என்ற பாடலுக்கு வெளிநாட்டவரின் நடனம் நன்றாகவே இருக்கிறது.
மக்கள் இந்த வீடியோவை விரும்பியதோடு, பிற பாரம்பரிய இந்திய நடன வடிவங்களை முயற்சிக்கும் நடன வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். ஒரு பயனர், ”அற்புதமான மனிதர்…தமிழ்நாட்டு ரசிகர்” என்று எழுதினார், மற்றொருவர், ”நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்” என்று எழுதினார். மூன்றாவதாக ஒருவர், "இந்தியக் காதல்" என்று எழுதினார்.
மேலும் படிக்க | Viral Video: இது தான் கடல் அரக்கனா... ஆற்றில் உலாவும் ராட்சஸ மீன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR