தனது சொந்த திருமணத்தையே மறந்த மணமகன்! ஏன் தெரியுமா?
மது அருந்திய மணமகன் ஒருவர் தனது திருமண நாளை மறந்து திருமணத்திற்கு செல்லாமல் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான ஒன்று, ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் என்பது முக்கியமான தருணமாகும். திருமணம் என்றதுமே மனதுக்குள் ஒருவித சந்தோசம் வந்துவிடும், இந்த பெரிய நாளில் உற்சாகமாக இருப்பது மட்டுமின்றி திருமணத்திற்கு முன்னரே தங்களை தயார்படுத்தி வருகின்றனர். திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவில் எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள், அப்படி இருக்கையில் அந்த எதிர்பார்ப்பில் ஏதேனும் ஏமாற்றம் ஏற்பட்டால் அது மனதில் வடுவாக மாறிவிடும். அனைவரது வாழ்க்கையிலுமே திருமணம் மறக்கமுடியாததொரு ஒரு பொன்னான அனுபவமாக இருக்கும். திருமணம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான், திருமணத்தை உறவினர்கள் மறைப்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தனது சொந்த திருமணத்தை மணமகனோ அல்லது மணமகளோ மறந்துவிட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் தான் பீகார் பகுதியில் நடந்து பேசுபொருளாகியுள்ளது. பீகார் மாநிலம், பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் செய்த காரியம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்றால் கண்டிப்பாக மகிழ்ச்சி இருக்கும் தான், திருமணத்தை நினைத்து மகிழ்ச்சியடையாவிட்டால் தான் வருத்தப்பட வேண்டும். மகிழ்ச்சி மிகுதியாக இருந்தால் அதில் எவ்வித தவறுமில்லை, ஆனால் இங்கு மணமகன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றது தான் தவறாகி விட்டது. தனக்கு கல்யாணம் நடக்கப்போகிறது என்கிற அளவுகடந்த சந்தோஷத்தில் மணமகன் அதிகளவில் மது அருந்திவிட்டு போதையில் கல்யாணம் நடைபெறும் நாளை மறந்து மண்டபத்திற்கு செல்லாமல் போதையில் இருந்துவிட்டார்.
மணமகளும் அவரது குடும்பத்தினரும் மணமகன் எப்போது வருவார் என்று அவருக்காக அந்த இடத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர், ஆனால் மது போதையில் மயங்கி கிடக்கும் மணமகனோ அந்த இடத்திற்கு வரவே இல்லை. மணமகன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வராததை தொடர்ந்து மணமகளும் அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பிவிட்டனர். மதுபோதையில் இருந்து சுயநினைவை அடைந்த மாப்பிள்ளை உடனே மணமகள் வீட்டிற்கு விரைந்து மீண்டும் திருமணம் செய்துகொள்ள கோரிக்கை வைத்தார். மணமகனின் இந்த மோசமான செயலால் மனவேதனை அடைந்த மணப்பெண் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார், தன் பொறுப்புகளை புரிந்து கொள்ளாத ஒரு மனிதனுடன் தன் வாழ்க்கையை கழிக்க முடியாது என்று மணப்பெண் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
அதன் பின்னர் திருமண ஏற்பாடுகளுக்கு செலவு செய்த பணத்தை மணமகன் வீட்டார் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவரது பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மணமகனின் உறவினர்கள் சிலரை மணப்பெண்ணின் குடும்பத்தினர் பிணைக் கைதிகளாக வைத்தனர். அதன் பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ