‘இப்படித்தான் கிஸ் கொடுக்கணும்’: நாய்க்கு சொல்லிக்கொடுக்கும் குழந்தை, செம கியூட் வைரல் வீடியோ!!

Dog Baby Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது. அத்தனை கியூட்டான ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2023, 05:55 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டிக்கு குழந்தை ஒன்று முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.
‘இப்படித்தான் கிஸ் கொடுக்கணும்’: நாய்க்கு சொல்லிக்கொடுக்கும் குழந்தை, செம கியூட் வைரல் வீடியோ!! title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் அழகான உறவு இருக்கிறது. பரஸ்பர மரியாதை, பாசம் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த பிணைப்பை வளர்க்கின்றன. நாய்கள் மற்றும் மனிதர்களின் உறவை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள்  சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. விலங்குகளை பராமரித்து, அதன் மூலம் மனிதர்கள் தங்கள் பாசத்தை அடிக்கடி வெளிப்படுத்துகிறார்கள். அதேபோல், நாய்களும் தங்கள் மனித தோழர்கள் மீதான பற்று மற்றும் பாசத்தை பல வழிகளில் வெளிக்காட்டுகின்றன. 

நாய்கள் வாலை ஆட்டுவது, உரிமையாளர்களின் கன்னங்களை முத்தமிடுவது, அவர்கள் மீது ஏறி விளியாடுவது என இந்த அனைத்து செயல்களுமே அவற்றின் பாசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. நாய் உரிமையாளர்களும் தங்கள் நாய்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள், அவற்றுடன் விளையாடுகிறார்கள். இந்த அபிமான இணைப்பு பல உயிரினங்களுக்கு இடையே உருவாகக்கூடிய ஆழமான பிணைப்புகளின் அற்புதமான அறிகுறியாகும். மேலும் இப்படிப்பட்ட பாசப்பிணைப்புகள் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. 

மேலும் படிக்க | Viral Video: அம்மாடி... என்ன வாய்.... இது பேசும் கிளி இல்லை... அரட்டை அடிக்கும் கிளி!

ஒரு நாயிடம் ஒரு குழந்தையை அறிமுகப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஏனென்றால் குழந்தைகள் நாய்களிடன் எப்படி பழகுவார்கள் என்பதை கணிக்க முடியாது. எனினும் நாய்களுக்கு குழந்தைகளை மிக பிடிக்கும். அவை அவர்களுடன் நன்றாக இணைந்து விளையாடுகின்றன. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டிக்கு குழந்தை ஒன்று முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

நெஞ்சை அள்ளும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவில், ஒரு சிறிய குழந்தை மற்றும் ஒரு சிறிய நாய்க்கு இடையில் ஏற்படும் பாசப்பிணைப்பின் காட்சிகளை காண முடிகின்றது. ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் முதலில் இந்த வீடியோவை வெளியிட்டார். பின்னர் கோல்டன் ரெட்ரீவர் வீடியோக்களை மட்டுமே கொண்ட ஒரு பக்கம் அதை பகிர்ந்து கொண்டது. வீடியோவின் துவக்கத்தில் ஒரு நாய்க்குட்டி ஒரு ஒரு சோபாவில் தூங்குவதை காண முடிகின்றது. அப்போது அங்குள்ள குழந்தை பாசமாக வந்து நாய்க்கு முத்தமிடுகிறது. அக்குழந்தை நாய்க்கு மீண்டும் மீண்டும் முத்தமிடுவதைக் காண முடிகின்றது. "இது காதல் என்று நான் நினைக்கிறேன்." என வீடியோவில் எழுதப்பட்டுள்ளது. 

வீடியோவை பார்த்தால், அக்குழந்தை எப்படி அழகாக முத்தமிடுவது என நாய்க்கு கற்றுக்கொடுப்பது போல தோன்றுகிறது. வீடியோ வெளியானதிலிருந்து 2.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 195,000 க்கும் மேற்பட்ட  லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | 20 அடி மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட விசித்திர உருவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News