மேடையிலேயே மாப்பிள்ளை செய்த வேலை: ஷாக்கில் மணப்பெண், வைரலாகும் வீடியோ

Funny Marriage Video: ஒரு அட்டகாசமான திருமண வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இதில் மாப்பிள்ளை செய்யும் செயல் வைரலாக பரவி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2023, 01:13 PM IST
  • அனைவரது வாழ்க்கையிலும் திருமணத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு.
  • அனைவரும் தங்களது திருமண நாள் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
  • திருமண நாளில் பொதுவாக அனைவருமே மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மேடையிலேயே மாப்பிள்ளை செய்த வேலை: ஷாக்கில் மணப்பெண், வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அனைவரது வாழ்க்கையிலும் திருமணத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அனைவரும் தங்களது திருமண நாள் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். திருமண நாளில் பொதுவாக அனைவருமே மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனினும், சிலர் தங்கள் மகிழ்ச்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். சிலர் அதை பலர் காண வெளிப்படுத்துகிறார்கள். பல வேடிக்கையாக திருமண வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

சமீபத்திலும் மிக வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதில் மணமகனும், மணமகளும் நடனமாடுவதைக் காண முடிகின்றது. திருமணத்தின்போது மாலை மாற்றும் சடங்கு நடக்கின்றது. இந்த வீடியோவிலும், மணமக்கள் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மிக மகிழ்ச்சியுடன் இருப்பதை காண முடிகின்றது. அதுவும் மணமகனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது அவரது முகத்திலிருந்தே தெரிகிறது. 

மேலும் படிக்க | வைரல் வீடியோ: இவரு பெரிய அறிவாளி.. சேற்றில் அந்தர்பல்டி அடித்த இளைஞர்: செம காமெடி

மகிழ்ச்சியை கட்டுபடுத்த முடியாத மணமகன் தனியாகவே நடனமாடத் தொடங்கிவிடுகிறார். அவர் ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த பாடல் வரிகளும் மிகவும் வேட்டிக்கையான வரிகளாக இருப்பதால், அங்குள்ள விருந்தினர்களும் சிரிக்கத் தொடங்குகிறார்கள். மணமகனின் உண்மையான மன நிலையை வீடியோவில் தெள்ளத்தெளிவாக காண முடிகின்றது. 

வீடியோவை பார்த்தால் மணப்பெண்ணுக்கே மாப்பிள்ளை ஏன் இப்படி ஆடுகிறார் என்பது புரியவில்லை என்பது போல தோன்றுகிறது. அங்கு இருந்த மணமகனின் மாமனாருக்கோ, தனது மாப்பிள்ளையின் நடனத்தை பார்த்து மயக்கமே வந்துவிட்டது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

மணமகனின் மாஸ் நடனத்தை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ansh Srivastava (@anshsriva)

இந்த வீடியொ இன்ஸ்டாகிராமில் anshsriva என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

வீடியோவைப் பற்றி கருத்து தெரிவித்த பயனர் ஒருவர், 'இப்போது ஆடிவிட்டார்.. ஆனால் இந்த வீடியோவை பின்னாளில் பார்த்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை’ என கூறியுள்ளார். ‘அட.. இப்படி ஆடுகிறாரே.. இவரது ஆட்டத்தைப் பார்த்து மாமனார் மயங்கியே விழுந்திருப்பார்!’ என்று கமெண்ட் செய்துள்ளார். ‘இவரது நடனத்தை பார்த்து பெண் அதிர்ச்சியில் இருக்கிறார். நாளை காலையிலேயே விவாகரத்து கொடுப்பார்.’ என வேடிக்கையாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க | ‘இப்படித்தான் கிஸ் கொடுக்கணும்’: நாய்க்கு சொல்லிக்கொடுக்கும் குழந்தை, செம கியூட் வைரல் வீடியோ!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News