வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ


ஒருவரிடம் அன்பாக இருப்பதில் தவறில்லை, அதுவும் குறிப்பாக விலங்குகளிடம் அன்பாக இருப்பது நல்ல விஷயமாகும். அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் போலீஸ் ஒருவர் தாகத்தில் வாடும் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை-அகமதாபாத் சாலையில் உள்ள மல்ஷேஜ் காட் என்ற இடத்தில் போக்குவரத்து காவலர்கள் அருகில் உள்ள காடுகளில் இருந்து சாலை விலங்குகளுக்கு கொடுக்க தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதை அந்த வீடியோவில் காண முடிந்தது.


மனதை உருக்கும் இந்த சம்பவத்தின் வீடியோவில், குரங்குக்கு தண்ணீர் கொடுப்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரி பாட்டிலை வைத்திருப்பதைக் காணலாம். அந்த குரங்கும் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு தாகத்தை தீர்த்துக்கொள்கிறது. இந்த வைரல் வீடியோ StreetDogsofBombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 




 


இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் காவல்துறையினரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க | அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR