Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னா பின்னமான முதலை..!!

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும்.  தற்போது முதலை மற்றும் சிறுத்தை இடையேயான போராட்ட்டம் குறித்த  ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2022, 05:31 PM IST
Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னா பின்னமான முதலை..!! title=

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும்.  தற்போது முதலை மற்றும் சிறுத்தை இடையேயான போராட்ட்டம் குறித்த  ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  முதலைகள் தண்ணீரில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படும் முதலையை அதன் கோட்டைக்கே சென்று சிறுத்தை வீழ்த்திய வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. 

நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்றது சிறுத்தை. அதே நேரத்தில், ஜாகுவார் எனப்படும் சிறுத்தைகளும் மிகவும் ஆபத்தான விலங்கு. முதலையும் சிறுத்தையும் நேருக்கு நேர்  மோதிக் கொண்டால்  எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது போன்ற ஒரு காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில் காணப்படுகிறது.

 

வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஜாகுவார் காட்டில் இரை தேடி அங்கும் இங்கும் அலைந்து கடைசியாக ஆற்றின் கரைக்கு வருவதை பார்க்கலாம். அங்கு ஒரு முதலை தண்ணீரில் நீந்துவதைப் பார்க்கிறது. சிறுத்தை தாமதிக்காமல் ஆற்றில் குதித்து முதலையைப் பிடிக்கிறது. இந்த நேரத்தில் முதலை  தப்பிக்க வழியில்லாமல் சிறுத்தையிடம் சிக்கிக் கொள்கிறது. பின்னர் சிறுத்தை அதனை காட்டிற்குள் இழுத்துச் செல்கிறது.

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

வைரலாகி வரும் வீடியோவை கீழே காணலாம்:

அந்த வீடியோவில், ஜாகுவார் முதலையுடன் காட்டை நோக்கி செல்லும் விதத்தை பார்த்தால், முதலை உயிருடன் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த வீடியோ EXODOR என்ற YouTube சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது என்பதை அது பெறும் வ்யூஸ்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இந்த வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News