2 பாம்புகளை வாயில் கவ்விய ராஜ நாகம்... பார்த்தாலே பதறவைக்கும் வைரல் வீடியோ
King Cobra Viral Video: ராஜ நாகம் ஒன்று தனது வாயில் இரண்டு பாம்புகளை கவ்வியபடி ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தற்போது இங்கு காணலாம்.
King Cobra Stunning Viral Video: பாம்பு என்று சொன்னால் அந்த கணத்தில் பயப்படாதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவுதான். அந்தளவிற்கு பாம்பு குறித்த பார்வை அனைவருக்கும் அச்சத்தை வரவழைக்கும் தன்மையுடன் இருக்கிறது. சாதாரண பாம்பை பார்த்தாலே பதறும் நாம் ராஜ நாகத்தை நேரில் பார்த்தால் நிச்சயம் கடுமையாக பதறி அடித்து ஓடிவிடுவோம். ராஜ நாகம் இந்தியாவின் அடர்ந்த காடுகளில் அதிகம் காணப்படுபவை என்றாலும் மழை காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் நுழைவதையும் நாம் பார்த்திருப்போம்.
இந்தச் சூழலில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ராஜ நாகங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவேற்றியிருக்கிறார்கள். இதில் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியும் உள்ளன. ஆயிரக்கணக்கில் பாம்புகளின் வீடியோ இணையத்தில் இருந்தாலும், இந்தியாவில் காணப்படும் ராஜநாகங்களின் வீடியோக்கள் எண்ணிக்கையும் அதிகம்தான். ராஜ நாகங்களின் நேரில் பார்த்தால் எந்தளவிற்கு நமது மனதிற்கு அச்சம் எழுமோ அந்தளவிற்கு வீடியோக்களை பார்த்தாலும் நமக்கு அச்சம் ஏற்படும்.
பதறவைக்கும் ராஜ நாகம்
அந்த வகையில் தற்போது ராஜ நாகம் என கூறப்படும் பாம்பு தனது வாயில் இரண்டு பாம்புகளுடன் கம்பீரமாக ஊர்ந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட ராஜ நாகத்தை வீடியோவில் பார்க்கும்போது கதிகலங்குவதாக பலரும் அந்த வீடியோவை பார்த்து கருத்து தெரிவிக்கின்றனர். X தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ வெறும் 15 வினாடிகள் மட்டுமே உள்ளது. கடந்த செப். 16ஆம் தேதி இரவு X தளத்தின் @AMAZlNGNATURE என்ற பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை சுமார் 23 லட்சத்திற்கும் மேலானவர்கள் தற்போது பார்த்துள்ளனர்.
ராஜ நாகம் பாம்புகளின் ராஜ என்றே நாம் கூறலாம். அப்படிப்பட்ட அந்த பாம்பு 2 பாம்புகளை வாயில் கவ்விக்கொண்டு வருவதை பார்க்கும்போது, சிங்கம் மானை வேட்டையாடி வாயில் வைத்துக்கொண்டு வரும் காட்சியை பார்ப்பதுபோல் இருக்கிறது எனலாம். ராஜ நாகங்கள் தங்களின் எதிரிகளை எப்படி வேட்டையாடுகிறது என்பதை அறிய இந்த வீடியோ காட்டுகிறது.
பாம்பை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?
குறிப்பாக, இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த வீடியோ கடந்த ஜூன் மாதமும் பல்வேறு சமூக வலைதள கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது தெற்காசிய நாடுகளில் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த வீடியோவை எடுத்தவர் அச்சமின்றி மிக நெருக்கமாக இருந்துள்ளார்.
இருப்பினும், இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எனவே, பாம்பு பார்த்தீர்கள் என்றால் வீடியோ எடுக்க நினைக்காமல் அவை உங்களை தாக்காதவாறு முதலில் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திட்டமிடுங்கள். அதன்பின் பாம்பு குறித்து வனத்துறைக்கோ அல்லது தீயணைப்பு துறைக்கோ தகவல் கொடுக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல கணக்குகளில் இருந்து பாம்புகள் குறித்து வீடியோவை கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த கமெண்டில் குறைந்தபட்சம் 20க்கும் மேற்பட்ட பாம்புகள் குறித்த வீடியோ நீங்கள் பார்க்கலாம். இணையம் முழுவதும் குவிந்து கிடக்கும் இதுபோன்ற வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை கவரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ