பாம்புகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய நபர்... பார்த்தாலே வயிற்றை கலக்கும் - வைரல் வீடியோ!

Snake Viral Video: பல மலைப்பாம்புகள் சூழ்ந்திருக்க, அதன் படுத்துக்கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2024, 04:12 PM IST
  • இது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
  • கடந்த வாரம் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவை 7 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
பாம்புகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய நபர்... பார்த்தாலே வயிற்றை கலக்கும் - வைரல் வீடியோ!

Snake Viral Video: பாம்பு என்றாலே நம்மில் பலருக்கும் பயம் கலந்த பதற்றமே முதலில் வரும். அது மலைப் பாம்போ, நாகப் பாம்போ, விஷப் பாம்போ அல்லது தண்ணீர் பாம்போ எந்த வகை பாம்பாக இருந்தாலும் பயம் மட்டும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். கிராமப்புறங்களில் அதுவும் இதுபோன்ற மழைக்காலங்களில் பாம்பை பார்ப்பது என்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

வயல் பகுதிகளில், மரங்கள் அடர்ந்த பகுதிகள் அவர்கள் பாம்பை பார்த்தால், பயப்படாமல் மெதுவாக அதற்கு தொந்தரவு அளிக்காமல் சென்றுவிடுவார்கள். அதேபோல், பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டாலும் கூட அதனை பெரும்பாலும் காயப்படுத்தாமல் அதை வெளியேற்றுவார்கள் அல்லது வனத்துறைக்கு தகவல் அளித்து அவர்கள் மூலம் வெளியேற்றுவார்கள். பாம்பை குறித்து பயப்படாமல் இருப்பதே அவை உங்களை தாக்காமல் இருப்பதற்கான முதல் விஷயம் ஆகும். 

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ

அந்த வகையில், விலங்குகள் நல ஆர்வலரான ஒருவர் தனது பிறந்தநாளை பல மலைப் பாம்புகளின் மேல் படுத்துகிடந்து கொண்டாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் (Instagram Viral Video) ஆகி வருகிறது. இந்த வீடியோ குறித்த முழு விவரத்தையும் இதில் காணலாம்.

மேலும் படிக்க | பாய் போட்டு படுத்திருந்த மலைப்பாம்பு - பக்கத்தில் குழந்தை... அதை பார்க்காத தாய் - பகீர் வீடியோ

யார் அந்த நபர்?

அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பவுண்டைன் வேலி என்ற இடத்தில் The Reptile Zoo எனும் பாம்பு, முதலை போன்ற ஊர்வன விலங்குகளுக்கான மிருகக்காட்சிசாலையை நடத்தி வருகிறார், ஜே ப்ரூவர். பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன விலங்குகள் மேல் தீராத பிரியம் கொண்டவரான ஜே ப்ரூவர் இந்த மிருகக்காட்சிசாலையை 20 பணியாளர்களுடனும், தனது மூன்று மகளுடனும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த மிருகக்காட்சிசாலை குறித்தும், ஊர்வன விலங்குகள் குறித்தும் அவர் @jayprehistoricpets என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். 

 

இந்த பக்கத்தில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் இந்த பக்கத்தை 80 லட்சத்திற்கு அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்த பக்கத்தில் கடந்த வாரம் ஜே ப்ரூவர் பதிவிட்ட அவரத பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோதான் உலகம் முழுக்க பலரையும் கவர்ந்துள்ளது. ஜே ப்ரூவர் பல மலைப்பாம்புகளுக்கு நடுவே ஜாலியாக படுத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார். 

பாம்பு பார்ட்டி

அந்த பதிவில்,"இதுதான் பாம்பு பார்ட்டி... இன்று எனது பிறந்தநாள், அதனால் நான் எவ்வளவோ அன்பை பெற்றிருக்கிறேன் பாருங்கள் மற்றும் நான் நடத்திய இந்த அபாரமான பார்ட்டியை உங்கள் அனைவருக்கும் காட்ட விரும்புகிறேன். இந்த முதியவருக்காக சூரியனைச் சுற்றி இன்னொரு வருடம்... நகைச்சுவைக்கு அப்பால், எனது பயணத்தில் என்னைப் பின்தொடர்ந்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்பினேன். நீங்கள் அனைவரும் இல்லாமல் இதனை நான் செய்திருக்க முடியாது. இது முற்றிலும் நம்ப முடியாதது" என அவரது பண்ணைக்கு இணையத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 

பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன விலங்குகளை சார்ந்த வீடியோக்களை பார்க்க இவரது பக்கத்தை இன்ஸ்டாகிராமில் நீங்கள் பின்பற்றலாம். 

மேலும் படிக்க | மழையில் ரீல்ஸ் எடுக்கும் போது வழுக்கி விழுந்த பெண்! வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News