கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட இத்தாலி, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தடுப்பூசிக்கு பயந்த 50 வயதான நபர் ஒருவர், தடுப்பூசி போடாமலேயே சான்றிதழ் வாங்க வேண்டும் என முயற்சி செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சூரிய கிரகணம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன் தரும்


அதற்காக, சிலிக்கோனால் செய்யப்பட்ட பொய்யான கையை உடலில் பொருத்திக் கொண்ட அந்த நபர், பீட்மாண்டில் உள்ள பியெல்லா தடுப்பூசி நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு செவிலியர் பிலிப்பா புவா தடுப்பூசி செலுத்த முற்பட்டுள்ளார். அப்போது அவருடைய கையானது மிகவும் மெலிதாக, இயல்புக்கு மாறாக இருந்ததால், செவிலியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அந்த கைப்பகுதியை சோதித்தபோது, சிலிக்கோனால் செய்யப்பட்ட செட்டிங் கையை அவர் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பயம் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். 


ALSO READ | 7th Pay Commission: சம்பளத்தில் 95,000 ரூபாய் அதிகரிப்பா! கணக்கீடு என்ன?


இது குறித்து செவிலியர் புவா பேசும்போது, " அந்த நபர் தடுப்பூசி போடுவதற்காக வந்தார். அவரது கையைப் பிடித்து தடுப்பூசி போட முயற்சித்தேன். கையை தொட்டுப் பார்க்கும்போது மிகவும் மெலிதாக இருந்ததால், சந்தேகம் ஏற்பட்டது. முதலில் தோல் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்திருப்பார் என நினைத்தேன். உண்மையில், அவர் சிலிக்கோனால் செய்யப்பட்ட பொய்யான கையை உடலில் பொருத்தியிருந்தார். இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், முதலில் நான் பரிதாபப்பட்டிருந்தேன். இப்படியெல்லாம் செய்வார்கள் என யோசித்துக்கூட பார்த்ததில்லை. 34 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். ஊசிக்கு பயந்து, பொய்யான கையை செட்டிங் செய்து வந்தவர், என் அனுபவத்தில் இவர் மட்டுமே" எனத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அந்த நபரை அரசு அதிகாரிகளும் எச்சரித்து அனுப்பினர். இதுபோன்று யாரேனும் செய்தால், தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்து, செயற்கையாக கையை ஒருவர் செட்டிங் செய்தது, இணையத்தில் வைரலாகியுள்ளது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR