வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்கு வீடியோக்கள் தொடர்ந்து இணையவாசிகளை வசீகரித்து வருகின்றன. மனிதர்கள் எதிர்பாராத மற்றும் அபூர்வமான பல அற்புதமான நிகழ்வுகளை இவை காட்டுகின்றன. தனியாக ஒரு விலங்கு செய்யும் செயல்களாக இருந்தாலும் சரி, பல விலங்குகள் சேர்ந்து செய்யும் சில்மிஷங்களாக இருந்தாலும் சரி, விலங்குகள் இணையவாசிகளை மகிழ்விக்க தவறுவதில்லை. 


நாய்கள் மற்றும் குரங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகின்றன. குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மிக கியூட்டாக இருந்து, இணையவாசிகளின் உள்ளங்களை கொள்ளைகொள்கின்றன. குறிப்பாக மிக வித்தியாசமான, விசித்திரமான பல குரங்கு வீடியோக்களை நாம் இணையத்தில் தினமும் காண்கிறோம். தற்போதும் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு குரங்கு மற்றும் நாய் பற்றியது. சில விலங்குகளை மக்கள் வீடுகளில் வளர்க்கிறார்கள். நாய், பூனை ஆகியவை இவற்றில் மிக அதிகமாக வளர்க்கப்படுகின்றன. 


இந்த வீடியோவில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று வீட்டின் மாடியில் நின்றுகொண்டு இருக்கின்றது. அங்கு வரும் குரங்கு ஒன்று அதற்கு பல வழிகளில் தொந்ததரவு கொடுக்கின்றது. நாயின் முகத்தை பிடித்து குரங்கு பாடாய் படுத்துகிறது. நாயின் கை, கால், கழுத்து என குரங்கு நாயை பல இடங்களில் தொட்டு சீண்டுகிறது. மற்றொரு சுவரின் மீது ஏறி நின்று நாயை மிரட்டுவது போல செய்கிறது.


ஆனால், நாய் ஒன்ருமே செய்யாமல் கூலாக நிற்கிறது. குரங்கு செய்யும் சேட்டைகளை அது கண்டுகொள்ளவே இல்லை. இது மிக வித்தியாசமாக உள்ளது. நாயும் குரங்கும் அடித்துக்கொள்ளும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், இது மிக அபூர்வமாக உள்ளது. நாய் இருக்கும் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு அது நினைத்திருந்தால் குரங்கை பலமாக தாக்கியிருக்கலாம். ஆனால் நாய் அப்படி எதுவும் செய்யவில்லை. 


மேலும் படிக்க |  பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு இந்த பெண் செய்த வேலையை பாருங்க!


சீண்டிய குரங்கை கூலாக ஹேண்டில் செய்த நாயின் வீடியோவை இங்கே காணலாம்



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ யூடியூபில் Black Beast என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'நாயின் ரியாக்ஷன் மிக ஆச்சரியமாக உள்ளது' என ஒருவர் எழுதியுள்ளார். 'இப்படி கூட நடக்குமா' என ஒரு ஒருவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க |  துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பாம்பு! அலறியடித்து ஓடிய மக்கள்! வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ