இணையம் என்பது தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த ஒரு முன்னேற்றமாக தினம் தினம் நமக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது. தினம் சமூக ஊடக தளத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், அசில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன. அதிலும் வன வாழ்க்கையை காட்டும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக யானை, குரங்கு ஆகியவற்றின் சேட்டைகள் குறித்த வேடிக்கை வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அதிலும் யானைகள் குறிப்பாக, குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
கால மாறுதல்களுக்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டே இருக்கிறோம். பொழுது போக்கு என்பதும் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் பண்டிகை காலங்களில் மட்டுமே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இணைத்து ரசித்து மகிழ்ந்த மனிதர்களுக்கு, இன்று உலகமே கைக்குள் அடங்கி விட்டதை சொல்லும் அளவு, கைக்குள்ளே அடங்கிவிட்டது ‘மொபைல்’ என்னும் நவீன தொழில்நுட்ப சாதனம்.
யானை கூட்டமாக வரும் போது தாக்குதல் நடத்தாது. ஒன்றை யானையாக இருந்தால், அது சீற்றத்துடன் தாக்கும் என பலர் சொல்லி க் கேள்விப்படிருப்போம். ஆனால், சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், யானை ஒன்று, வரும் லாரிகளை நிறுத்தி, டிரைவரிடம் சென்று கட்டுக்கட்டாய் லாரியில் அடுக்கியிருக்கும் கரும்புகளில் இருந்து தனக்கு வேண்டிய அளவு கரும்பை மட்டும் எடுத்துக் கொண்டு வழிவிடுகிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த புத்திசாலி யானை கரும்பு லாரிகளை மட்டுமே, வழிமறித்து மாமூல் கேட்கிறது. வேறு வாகனங்களை வழி மறிக்காமல் சாலையில் ஒதுங்கி நிற்பதும் பார்க்கவே திகைப்பைக் கொடுக்கிறது.
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
Elephants in Thailand have learned to exploit their right of way and stop passing sugar cane trucks to steal a snack.. pic.twitter.com/U12Br0kRrO
— Buitengebieden (@buitengebieden) December 5, 2023
காடுகளில் வாழும் யானைகள், உணவுக்காக, மக்கள் வாழும் பகுதிக்குள் வரும் போது, உக்கிரமாக நடந்துக் கொள்ளுவது, வேளாண் நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது என பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த யானை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோ தாயலாந்தில் எடுக்கப்பட்டுள்ளது.
யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். ஒரு யானை முழு முதிர்ச்சி அடைய 16 ஆண்டுகள் ஆகும். ஆனால் யானை 20 வருடங்கள் வரை தொடர்ந்து வளரும். முதிர்ச்சி அடைந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரையிலான உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை. அதாவது 21 மாதம் முதல் 22 மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்த உடனேயே நடக்கும். ஆனால், அங்கும் இங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். பிறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தான் குட்டி யானைக்கு, அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட அழகானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ