வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்கங்களில் குரங்குகள் பற்றிய பல வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. அதிக குறும்பு செய்யும் விலங்குகளில் குரங்கும் ஒன்றாகும். இது செய்யும் குறும்பு பல சமயம் வேடிக்கையாக இருந்தாலும், சில சமயங்களில் வினையாகவும் முடிவதுண்டு. பொதுவாக குரங்கு என்று இல்லாமல், அனைத்து விலங்குகளும் தங்களுக்கு ஆபத்து என்று வந்தால்தான் மற்றவர்களை தாக்கும். 


ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவில் இதற்கு மாறான ஒரு காட்சியை காண முடிகின்றது. இந்த வீடியோவில் ஒரு குரங்கு, எந்த காரணமும் இல்லாமல் சாலையில் செல்லும் ஒரு முதியவரை உதைத்துவிட்டு செல்வதை காண முடிகின்றது. முதியவரை உதைத்துவிட்டு அது மின்னல் வேகத்தில் ஓடிச்செல்கிறது. 


மேலும் படிக்க | Viral Video: மனிதனை பந்தாடிய சுறாக்கள்! திகிலூட்டும் வைரல் வீடியோ! 


வீடியோவின் துவக்கத்தில், ஒரு முதியவர் சாலையில் நடந்துசெல்வதை காண முடிகின்றது. அப்போது ஒரு குரங்கு பின்னாலிருந்து அவரை நோக்கி வேகமாக ஓடி வந்து, அவர் முதுகில் பலமாக எட்டி உதைக்கிறது. குரங்கு உதைத்த வேகத்தில், அவர் உடனே கீழே விழுந்துவிடுகிறார். அவரை உதைத்துவிட்டு குரங்கு வேகமாக ஓடிச்சென்று விடுகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு அந்த முதியவர் எழுந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. பின்னர் அவர் தன்னை பின்னாலிருந்து அடித்தது யார் என யோசிக்கத் தொடங்குகிறார். 


குசும்பு பிடித்த குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த குரங்கின் குறும்பை பார்த்து மக்கள் சிரித்தாலும், முதியவருக்காகவும் பலர் வருத்தப்படுகிறார்கள். இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @HasnaZarooriHai என்ற ஐடியால் பகிரப்பட்டது. 15 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 20,000 முறைக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | 'உன்ன பாக்க வந்தது ஒரு குத்தமா?’: படுத்திய குரங்கு, அலறிய நபர், வைரலான வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ