பாம்பை வலையில் சிக்கவைத்த சிலந்தி, நடு வானில் ஒரு போராட்டம்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ

Rare Snake Video: பாம்பு பல ஜீவன்களை பாடாய் படுத்துவதை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். ஆனால், பாம்பு பாடாய் படும் வீடியோவை இதுவரை பார்த்திருக்க முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 22, 2022, 12:14 PM IST
  • சிலந்தி வலையில் சிக்கிய பாம்பு
  • வியந்து போன இணையவாசிகள்.
  • காணக்கிடைக்காத அரிய வீடியோ.
பாம்பை வலையில் சிக்கவைத்த சிலந்தி, நடு வானில் ஒரு போராட்டம்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடக உலகில் வினோதமான காட்சிகள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சில காட்சிகள் காண்பவர்களை முற்றிலும் உலுக்கிப்போடும் வகையிலும் இருப்பதுண்டு. நம்மால் நம்ப முடியாத பல விஷயங்களை நாம் இணையத்தில் காண்கிறோம். பாம்புடன் தொடர்புடைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பாம்பு ஒன்று சிலந்தி வலையில் சிக்கியிருப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

பல முயற்சிகள் செய்தும் அந்த பாம்பால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. பாம்பு பல ஜீவன்களை பாடாய் படுத்துவதை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். ஆனால், பாம்பு பாடாய் படும் வீடியோவை இதுவரை பார்த்திருக்க முடியாது. அந்த அரிய காட்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களின் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | உப்புமூட்டை தூக்கி்ட்டுப் போ! காதலியை முதுகில் சுமக்கும் காதலன்! காதல் பறவைகள் 

சிலந்தி வலையில் சிக்கிய பாம்பு

வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும் போது பாம்பு முதலில் மரத்தில் ஏறியிருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது. சிலந்தி தனது வலையை மரத்தின் ஒரு பகுதியில் வைத்திருக்கிறது. பாம்பு அதன் அருகே சென்றவுடன் அதில் சிக்கியது. அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று அதற்கு புரியவில்லை. அந்தக் காட்சியைப் பார்த்த யாராலும் இதை நம்பமுடியவில்லை. பாம்பு கூட இப்படி மாட்டிக்கொள்ளுமா என்ற கேள்வியே அனைவர் மனதிலும் உள்ளது. 

காணக்கிடைக்காத அரிய வீடியோவை இங்கே காணலாம்: 

பாம்பு மற்றும் சிலந்தி வலை தொடர்பான இந்த வீடியோவை முன்னாள் கடற்படை அதிகாரி வினோத் குமார் ஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இதுவரை இப்படி ஒரு வீடியோ வெளிவரவில்லை. சிலந்தி தன் வலையில் பாம்பை சிக்க வைத்தது. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை இது நிரூபிக்கிறது.” என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | ‘உன்ன பாக்க வந்தது ஒரு குத்தமா?’: படுத்திய குரங்கு, அலறிய நபர், வைரலான வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News