Viral Video: மனிதனை பந்தாடிய சுறாக்கள்! திகிலூட்டும் வைரல் வீடியோ!

வன விலங்குகள், கடல் விலங்குகள், பாம்புகள் போன்றவை இணையத்தில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், சமீபத்தில், ஒரு சுறா தொடர்பான வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2022, 01:34 PM IST
  • வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
  • மனிதனை பந்தாடும் சுறா மீனின் வீடியோ.
  • சமூக வலைதளங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
Viral Video: மனிதனை பந்தாடிய சுறாக்கள்! திகிலூட்டும் வைரல் வீடியோ! title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன ஆனால் சில வீடியோக்களால் மட்டுமே நெட்டிசன்களை கவர முடிகிறது. அதிலும், வன விலங்குகள், கடல் விலங்குகள், பாம்புகள் போன்றவை இணையத்தில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், சமீபத்தில், ஒரு சுறா தொடர்பான வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் சில சுறாக்கள் இணைந்து ஒரு நபரை பந்தாடுவதைப் பார்க்கலாம். இந்தக் காட்சியைப் பார்த்தர்களால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

மனிதனை பந்தாடிய சுறாக்கள்

வைரலாகி வரும் இந்த வீடியோவில்,  ஒரு நபர் பெரிய பலூனுக்குள் சென்று கடலுக்குள் சென்ற நிலையில், சிறிது நேரத்தில்  அவர் சுறாமீன் அருகில் சென்றடைந்துள்ளார். முதலில், சுறாக் கூட்டம் அவரைப் பார்த்து ஆச்சரியமடைந்தது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த மனிதனை கால்பந்தைப் போல காற்றில் தூக்கி எறிந்து விளையாடத் தொடங்கின. அந்தக் காட்சியைப் பார்த்ததும் அவன் கண்களை யாராலும் நம்ப முடியவில்லை.

மேலும் படிக்க | Viral Video: மிரட்டும் எலி... அஞ்சி நடுங்கும் பூனை... இது தான் ரியல் Tom & Jerry!

மனிதனை பந்தாடும் சுறா மீனின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ocean Life (@oceanlife.4u)

சுறா தொடர்பான இந்த திகிலான வீடியோ oceanlife.4u என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பார்த்து, பல்வேறு வகையான ரியாக்ஷன்களை கொடுத்து ரசித்து வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது.

சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். மிகவும் கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ள சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனையும் கொண்டுள்ளன. பத்து இலட்சம் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து கண்டு பிடித்து விட முடியும். சுறா மீன்களின் கேள்திறனும் அதிகம். நுண்ஒலிகளை கூடக் கேட்கும் திறன் பெற்றவை. சுறாக்களில் சுமார் 440 வகை உண்டு என கூறப்படுகிறது. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை.

மேலும் படிக்க | Viral Video: நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் வாத்து!

மேலும் படிக்க | Viral Video: கூட்டு களவாணிகள் என்றால் இவர்கள் தானோ... சிறுமியை அலர்ட் செய்யும் நாய்!

மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News