உப்புமூட்டை தூக்கி்ட்டுப் போ! காதலியை முதுகில் சுமக்கும் காதலன்! காதல் பறவைகள்

Viral Video: ஈருடல் ஓருயிர் என்று சொல்வதைப் போல காட்சியளிக்கும் இந்த காதலர்களின் பிரிவு, பார்க்கவே பரவசமாக இருக்கிறது? இது என்ன கூத்து

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 04:26 PM IST
  • காதலியை முதுகில் சுமக்கும் காதலன்
  • காதல் பறவைகள் வீடியோ வைரல்
  • காதல் ஜோடிப்புறாக்கள்
உப்புமூட்டை தூக்கி்ட்டுப் போ! காதலியை முதுகில் சுமக்கும் காதலன்! காதல் பறவைகள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

காட்டு விலங்குகள் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் தினமும் பதிவேற்றப்படுகின்றன. இவற்றில் சிங்கம், புலி, குரங்கு, யானை என இந்த விலங்குகளுக்கு இணையவாசிகளிடம் தனி மவுசு உள்ளது. 

மேலும் படிக்க | Viral Video:தங்க நிற ஏரியில் தாவி செல்லும் பூ நாரைகள்... வியக்க வைக்கும் அற்புத காட்சி! 

உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள், செடி கொடிகள் மரங்கள் என இயற்கை எப்போதுமே பரவசம் தரும் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையின் இதுபோன்ற வண்ணங்களை, நாம் எண்ணியும் பார்த்திருக்க முடியாது,

கனவிலோ கற்பனையிலோ கண்டிருக்க முடியாது. உலகில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாம் நேரில் பார்க்க முடியாது என்பதால், அவற்றை  வீடியோவாக பார்த்த்து ரசிக்கிறோம். 

மேலும் படிக்க | பாம்பை பிடிக்க குளத்தில் குதித்த இளைஞன்! பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ

அண்மைக் காலங்களாக பறவைகளின் பல்வேறு வகையிலான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. இந்த வீடியோக்கள் வைரலானாலும், ஆச்சரியங்களையும் அள்ளிக் கொடுக்கின்றன.

கழுகு என்றாலே கூர்மையான பார்வைக்கு உதாரணமாக சொல்லப்படுவதாகும். இதுவரை பார்த்திராத ஒரு அரிய நிகழ்வை இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள் கழுகின் பரவசாய் பறக்கும் தொழிலை கவனத்துடன் செய்யும் கழுகு, நம் கண்களை மட்டுமல்ல, மனதையும் கொள்ளை கொள்கிறது.

டபுள் டெக்கர் பேருந்தைப் போல, வானத்தில் பறக்கும் கழுகின் முதுகில் மற்றுமொரு பறவை அமர்ந்திருப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. ஈருடல் ஓருயிர் என்று சொல்வதைப் போல சில நிமிடங்கள் காட்சியளிக்கும் பறவைகள், சில நொடிகளில் பிரிந்து பறப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

உப்புமூட்டை தூக்கிட்டுப் போ என்று சொல்லி இந்த கழுகுகளும் விளையாடி இருக்குமோ என்று இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்டும், லைக்கும் போட்டிருக்கின்றனர். பார்க்க பரவசம் தரும் பறவை வீடியோ இது.

மேலும் படிக்க | மேடையில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News