'உன்ன பாக்க வந்தது ஒரு குத்தமா?’: படுத்திய குரங்கு, அலறிய நபர், வைரலான வீடியோ

Monkey Viral Video: இது இந்த நபருக்கு தேவைதானா என எண்ண வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. குரங்கின் வில்லத்தனமான குறும்பை இதில் காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2022, 03:59 PM IST
  • நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
  • இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • லங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
'உன்ன பாக்க வந்தது ஒரு குத்தமா?’: படுத்திய குரங்கு, அலறிய நபர், வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டு விலங்குகள் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் தினமும் பதிவேற்றப்படுகின்றன. இவற்றில் சிங்கம், புலி, குரங்கு, யானை என இந்த விலங்குகளுக்கு இணையவாசிகளிடம் தனி மவுசு உள்ளது. குறிப்பாக, குரங்குகளின் குறும்புகளை நாம் அனைவரும் விரும்பி பார்க்கிறோம். தற்போது மீண்டும் குரங்கின் குறும்பு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் குரங்கின் கூண்டருகே வந்த ஒரு நபரின் தலைமுடியை குரங்கு பிடித்துக்கொள்வதை காண முடிகின்றது. வீடியோவில் அதற்கு பிறகு நடக்கும் விஷயத்தை பார்த்தால் நம்மால் நம்ப முடியவில்லை. 

மேலும் படிக்க | Viral Video:தங்க நிற ஏரியில் தாவி செல்லும் பூ நாரைகள்... வியக்க வைக்கும் அற்புத காட்சி! 

குரங்கு செய்த சேட்டை 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் குரங்கின் கூண்டுக்கு அருகில் வந்து கிண்டல் செய்வதை நீங்கள் காண முடிகின்றது. ஆனால் குரங்குக்கு அது பிடிக்கவில்லை.  அது அந்த நபரின் தலைமுடியைப் பிடித்து இழுக்கிறது. வலியால் அந்த நபர் கத்துகிறார். தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனாலும், அந்த குரங்கு தன் பிடியை விடுவதாக இல்லை. பின்னர் கடுமையான முயற்சிக்கு பிறகு குரங்கின் பிடியிலிருந்து நபர் தன்னை விடுவித்துக்கொள்கிறார். 

குரங்கின் பிடிவாத வீடியோவை இங்கே காணலாம்: 

குரங்கின் குறும்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன. எனினும், இப்படிப்பட்ட காட்சிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. இந்த வீடியோவை நகைச்சுவை நடிகரான சுனில்க்ரோவர் (whosunilgrover ) தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | மேடையில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News