வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நாட்களில் இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக விலங்குகளுடன் சேர்ந்து எடுக்கப்படும் இப்படிப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் வைரல் ஆகின்றன. விலங்குகளின் குறும்புகளை காட்டும் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. அதுவும் குரங்குகளின் குறும்பை பற்றி கேட்கவே வேண்டாம். 


சமீபத்தில் இது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் லூப்பில் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமான பயனர்கள் இந்த வீடியோவை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் காண முடிகின்றது. இந்த வீடியோவில், தனது தொப்பியை எடுத்துச்சென்ற குரங்குக்கு ஒரு நபர் பாடம் கற்பிப்பதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் பாத்திரம் கழுவும் குரங்கு: செம்ம வீடியோ வைரல் 


திருடிய குரங்கு 


பொதுவாக, நாட்டின் சில நகரங்களில், குரங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படும். இந்த குரங்குகள் உணவு சேகரிக்க மக்களின் பொருட்களை திருடுவதையும் நாம் காண்கிறோம். குரங்குகள் முதலில் சிலரது பொருட்களை எடுத்துக்கொள்ளும். பின்னர், அவர்கள் ஏதாவது உணவுப் பொருளை கொடுத்து, அதற்கு பதிலாக தங்கள் பொருளை மீண்டும் பெறுவது வழக்கம். இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி காணப்படுகின்றன. இந்த வீடியோ-விலும் அப்படி ஒரு நிகழ்வுதான் காணப்படுகின்றது. 


ஏமாற்றப்பட்ட குரங்கு


இந்த வீடியோ மற்ற வீடியோக்களில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் தனது சாமர்த்தியத்தால், உணவுப் பொருளை கொடுக்காமலேயே தன் பொருளை குரங்கிடமிருந்து பெறுவதை காணலாம். குரங்கு மனிதனின் தொப்பியை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் கூரையில் அமர்ந்திருக்கிறது. அந்த நபர் குரங்குக்காக ஜூஸ் டப்பா வாங்கிக்கொண்டு வந்து அதை நோக்கி வீசுகிறார். முதலில் அதை தூக்கி போட்டு அதற்கு ஆசை காட்டுகிறார். பின்னர், மீண்டும் அவர் ஜூஸ் பாக்கெட்டை போடும்போது அதை பிடிக்க கையை விரிக்கும் குரங்கு தொப்பியை கீழே பொட்டு விடுகிறது. அந்த நபர் குரங்கு கையில் மாட்டாதபடிதான் ஜூஸ் பாக்கெட்டை போடுகிறார். இந்த வழியில் குரங்கு ஏமாந்து விடுகிறது. 


குரங்கு ஏமாந்த வீடியோவை இங்கே காணலாம்: 



வீடியோவில் காணப்படும் இளைஞனின் புத்திசாலித்தனத்தால், குரங்கு ஏமாந்து போகிறது. அதற்கு எதுவும் மிஞ்சவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் abhishekk_yadav என்பவரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 11 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளும் 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | ’ஓரமா போய் பயம்காட்டுப்பா’ நாக பாம்புக்கு ஷாக் கொடுத்த குரங்கு..! வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ