வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் ராட்சத பர்மிய மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடப்பதன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்த தேசிய பூங்காவில் கிம்பர்லி கிளார்க்கும் அவரது நண்பர்களும் சென்றுகொண்டிருந்த போது, இந்த ராட்சத பாம்பு அவர்கள் வண்டிக்கு எதிராக தோன்றியது. இதை பார்த்த அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். 


சுமார் 15 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோவை படம் பிடித்த கிளார்க், பாம்பு இருக்கும் இடத்தை உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.


அவர் இன்ஸ்டாகிராமில் பாம்பின் வீடியோவை வெளியிட்டார். அவர் தனது பதிவில், "எங்கள் புத்தாண்டு அதிரடியாகத் துவங்கியது. பல நம்பமுடியாத வனவிலங்கு காட்சிகள்! அவற்றை இந்த வாரம் வெளியிடுவேன், ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் சாலையைக் கடக்கும் 15+ அடி பர்மிய மலைப்பாம்பு. அவை நமது சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அந்த இடத்தைப் பின் செய்து அதிகாரிகளுக்கு புகாரளித்தோம்." என்று எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல் 


மலைப்பாம்பு சாலையை கடக்கும் காட்சியை இங்கே காணலாம்:



மலைப்பாம்பு மிக ஒய்யாரமாக சாலையை கடக்கும் காட்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது. வைரலாகியுள்ள இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


"அடடா!! பயங்கரமான சூழ்நிலை!! என் இதயம் நின்றுவிட்டது" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். " வாவ்!! அற்புதமான காட்சி" என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். 


பர்மிய மலைப்பாம்புகள் பூமியில் உள்ள மிகப்பெரிய பாம்புகளில் ஒன்று என நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் கூறுகிறது. அவை தென்கிழக்கு ஆசியாவின் காடுகள் மற்றும் புல்வெளி சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றன. அவை 23 அடி அல்லது அதற்கு மேற்பட்ட நீளமும் 200 பவுண்டுகள் வரை எடையும் கொண்டிருக்கும். பர்மிய மலைப்பாம்புகள் மாமிச உண்ணிகள், முதன்மையாக சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை உண்கின்றன. 


மேலும் படிக்க | மதிய உணவில் பாம்பு, நோய்வாய்பட்ட குழந்தைகள்: வைரலாகும் போட்டோஸ் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ