பாம்பை சாப்பிடும் மலைப்பாம்பு, வியப்பில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Rare Snake Video: பாம்புகளின் காணக்கிடைக்காத ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2023, 02:09 PM IST
  • விலங்குகளில் பாம்புகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • இவை உடனடியாக வைரல் ஆகி விடுகின்றன.
பாம்பை சாப்பிடும் மலைப்பாம்பு, வியப்பில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில் பாம்புகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை உடனடியாக வைரல் ஆகி விடுகின்றன. பொதுவாக பாம்புகளை பார்த்தால் அஞ்சாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால், பாம்புகளின் உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள அனைவருக்கும் எப்போதும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கிறது. 

தற்போது ஒரு பாம்பு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிக வித்தியாசமான ஒரு வீடியோவாக உள்ளது. இதில் ஒரு பெரிய பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுவதை காண முட்டிகின்றது. இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | டேய் எப்புட்றா...பாம்பு தோலை உரிக்கும் அறிய வைரல் வீடியோ

இணையவாசிகளை வியக்க வைத்துள்ள இந்த வீடியோவில், ஒரு பெரிய மலைப்பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிட்டுக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. மலைப்பாம்பு மற்றொரு பாம்பை சிறிது சிறிதாக மென்று தின்பதை காண்கிறோம். இது பார்ப்பதற்கு மிக வியப்பாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. பொதுவாக மலைப்பாம்புகள் பாம்புகளின் ராஜாக்களாக கருதப்படுகின்றன. இவை மற்ற பாம்புகளையும் அடிக்கடி தங்கள் இரையாக்கிக்கொள்கின்றன. இந்த வீடியோவில் காணப்படும் மலைப்பாம்பு சிறிது சிறிதாக, மற்ற பாம்பை கடித்து தன்னுள்ளே தள்ளுவது போன்ற காட்சி மிக அரிய காட்சியாக உள்ளது. 

பாம்பின் வியக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@snakebytestv)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் snakebytestv என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது, இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தாயை காப்பாற்றிய சிறுவன்...மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News