வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேடிக்கையான வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி கிரேஸ் உள்ளது. மனிதர்கள் செய்யும் பல வித வினோத மற்றும் விசித்திரமான வேலைகள் பற்றி இந்த வீடியோக்களில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட வேடிக்கையான வீடியோக்கள் படு வேகமாக வைரல் ஆகின்றன. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் மக்கள் சிரிப்பதற்கான ஏதாவது ஒரு வழியை தேடுகிறார்கள். 


தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இது ஒரு முதியவர் பற்றியது. இதில் அந்த முதியவரும் அவரது நண்பர்களும் செய்யும் வேடிக்கையை காண முடிக்கின்றது. முதியவரின் நண்பர்கள் அவரை காற்றில் தொங்கவிடுகிறார்கள். ஆனால், முதியவர் இதற்கு மாஸான பதிலடியை அளிக்கிறார். 


காற்றில் தொங்கிய முதியவர்


வைரலாகி வரும் வீடியோவில், பல நண்பர்கள் ஜாலியாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது. முதியவரின் நண்பர்கள் அவரை தராசுடன் கட்டி காற்றில் தொங்க விட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இதனால் கோவமான முதியவர் ஒருவரை அடிக்க முயற்சிக்கிறார். அந்த நபர் தப்பித்து விடுகிறார். ஆனால், முதியவர் மிகவும் கோவமடைந்து கை காலை ஆட்டத் தொடங்குகிறார். அவரால் மட்டும் முடிந்திருந்தால், அனைவரையும் அடித்து தள்ளியிருப்பார் என தெரிகிறது. 


மேலும் படிக்க | இது ஓவரா இல்ல? மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ


முதியவரின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்: 



முதுயவரின் இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் Cabinet Minister, Ministry of Memes என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கான இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூகளும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.   


மேலும் படிக்க | முதலையை துடிதுடிக்க பதம் பார்த்த 150 கிலோ மலைப்பாம்பு..வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ