இது ஓவரா இல்ல? மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ

Funny Wedding Video: திருமணத்தில் உறவினர்களின் உற்சாக மிகுதியால் நடந்த ஒரு வேடிக்கையான விஷயத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2023, 04:00 PM IST
  • திருமண மண்டபத்தில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருப்பதை வீடியோவில் துவக்கத்தில் காண முடிகின்றது.
  • அப்போது கயிறு இழுக்கும் விளையாட்டைப் போல, மணமக்களின் உறவினர்கள் ஒரு சிவப்பு துணியை இழுப்பதைக் காண்கிறோம்.
  • மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண் வீட்டுக்கும் நடக்கும் போட்டியாகவே இது மாறிவிடுகிறது.
இது ஓவரா இல்ல? மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய நிகழ்வாகும். இந்தியாவை பொறுத்தவரை இது இரு குடும்பங்களின் பிணைப்பாக பார்க்கப்படுகின்றது. திருமணம் இரு நபர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. திருமண தினத்தன்று நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள் நம் வாழ்வில் எப்போதும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். 

திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சில சுவாரசியமாகவும், சில வேடிக்கையாகவும், சில உணர்ச்சிவசப்படும் வகையிலும் இருப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றின் மூலம் நம் நாட்டில் இருக்கும் பல்வேறு திருமண சடங்குகள் பற்றி மக்கள் புரிந்துகொள்வதுடன் இவற்றில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை பார்த்து சிரித்து தங்கள் இறுக்கங்களையும் தளர்த்திக்கொள்கிறார்கள். 

திருமணங்களில் குறிப்பாக மாப்பிள்ளை, மணமகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உற்சாகம் அதிகமாக இருக்கும். ஆனால், சில சமயம் இந்த உற்சாகம் விபரீதத்திலும் முடிவதுண்டு. அப்படி உற்சாகத்தால் ஏற்பட்ட ஒரு இக்கட்டான சூழல் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது பகிரப்பட்டுள்ளது. 

சாதி, சமூகம், மதம் மற்றும் நாடு ஆகியவற்றின் அடிப்படையில் திருமணங்கள் வேறுபடுகின்றன. மேலும் ஒவ்வொரு பாரம்பரிய சடங்குகளிலும் நிகழ்விற்கு வேடிக்கை சேர்க்க ஏதாவது ஒரு அம்சம் கண்டிப்பாக இருக்கும். இருப்பினும், திருமணத்தில் திட்டமிடப்படாத விஷயங்கள் சில சமயம் மறக்கமுடியாத சில நினைவுகளை அளித்துவிடுகின்றன. 

இந்த வீடியோவிலும் அப்படி ஒரு பாரம்பரிய நிகழ்வு ஒன்று ஒரு திருமணத்தில் நடத்தப்படுவதை காண முடிகின்றது. ஒரு சடங்கை செய்யும் வேளையில் உறவினர்களின் கூட்டத்தால் மணமகள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது. 

திருமண மண்டபத்தில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருப்பதை வீடியோவில் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது கயிறு இழுக்கும் விளையாட்டைப் போல, மணமக்களின் உறவினர்கள் ஒரு சிவப்பு துணியை இழுப்பதைக் காண முடிகின்றது. மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண் வீட்டுக்கும் நடக்கும் போட்டியாகவே இது மாறிவிடுகிறது. இரு தரப்பிலும் உள்ள உறவினர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் அந்த துணியை தங்கள் வசமாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றனர். 

மேலும் படிக்க | முதலையை துடிதுடிக்க பதம் பார்த்த 150 கிலோ மலைப்பாம்பு..வீடியோ வைரல்

ஆனால், இந்த விளையாட்டுக்கு மத்தியில் அங்கு மணமக்கள் அமர்ந்து இருப்பதையே இவர்கள் மறந்துவிடுகிறார்கள். விளையாட்டின் ஆர்வத்தில் ஒரு பெண் மணமகள் மீது விழுந்துவிடுகிறார். இது போதாதென்று வேறு ஒரு நபரும் மணமகள் மீது விழுந்துவிடுகிறார். பின்னர் மூன்றாவதாகவும் ஒருவர் அவர் மீது விழுகிறார். இதனால் மணமகள் கீழே விழுந்துவிடுகிறார். 

உற்சாக மிகுதியால் நடந்த களேபரத்தின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@neptiktok)

இதனால் மணமகளுக்கு பெரிதாக எதுவும் ஆகவில்லை என தெரிவிக்கப்பட்டாலும், இது மிகவும் ஆபத்தாகவும் இருந்திருக்கலாம். மணமகனும் மணமகள் அங்கு இருக்கிறார் என உறவினர்களுக்கு கூறி எச்சரிக்க முயற்சிக்கிறார். ஆனால், உற்சாக மிகுதியில் இருக்கும் உறவினர்களின் காதில் எதுவும் விழவில்லை. 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ neptiktok என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 5 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துவருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | 'ஒண்ணுகூட நல்லா இல்லையே!!’: மொபைல் பார்த்து மாஸ் காட்டும் குரங்கு, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News