இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நாற்பதாவது பிறந்த நாளாகும் அவரின் பிறந்தநாளை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களும் சமூக ஊடகங்களில் கொண்டாடிக்களித்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் மற்றும் தமிழக வீரர் நடராஜான் ஆகியோரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் (Dhoni Birthday) வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் கடந்த ஜூலை 10,  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் (India vs New Zealand, 1st Semi-Final) தோனி ரன் அவுட் ஆனதும் இந்தியா இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்ததையும் குறிப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


நியூசிலாந்துக்கு எதிராக உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆன தினம் இன்று.


கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை போட்டியில் (ICC Cricket World Cup 2019) முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில்  நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. 


ALSO READ | ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு


இந்தப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் வெறும் ஒரே ரன்னில் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னால் கேப்டன் தோனி 72 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் (MS Dhoni Run Out) ஆனார். இன்னும் களத்தில் தோனி இருக்கிறார், ஆட்டத்தை வென்று விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, தோனி ரன் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதன் காரணமாக தோனியின் ரன்-அவுட் பெரும் விவாதத்துக்கு உள்ளானது.


ALSO READ | MS Dhoni vs Virat Kohli: WTC தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் துவங்கிய புதிய விவாதம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR