உலகக் கோப்பை 2019: விராட், ரோஹித், ராகுல் ஆகியோரின் மோசமான சாதனை

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோஹ்லி ஆகியோர் ஒரே ஆட்டத்தில் ஒரே ரன்னில் ஆட்டமிழந்து மோசமான சாதனை பட்டியலில் இந்தியாவின் பெயரை நுழைந்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 10, 2019, 06:50 PM IST
உலகக் கோப்பை 2019: விராட், ரோஹித், ராகுல் ஆகியோரின் மோசமான சாதனை title=

புதுடெல்லி: கிரிக்கெட் உலகில் வலுவான பேட்டிங்கிற்கு இந்திய அணி மிகவும் பிரபலமானது. ஆனால் ஐ.சி.சி உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்த வலுவான பேட்டிங் பெயரில் இந்த மோசமான சாதனை பதிவு செய்யப்பட்டது. நியூசிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் கே.எல்.ராகுல் (KL Rahul) இருவரும் தலா ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் மூன்றாவதாக வந்த விராட் கோலி (Virat Kohli) ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். 

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோஹ்லி ஆகியோர் ஒரே ஆட்டத்தில் ஒரே ரன்னில் ஆட்டமிழந்து மோசமான சாதனை பட்டியலில் இந்தியாவின் பெயரை நுழைந்துள்ளனர். ஒருநாள் வரலாற்றில் இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்கப்படுவது இதுவே முதல் முறை. 

இந்த மூன்று பேரில் முதலில் ரோஹித் சர்மா அவுட்டானார். மாட் ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் பிடிபட்டார். ரோஹித் நான்கு பந்துகளை எதிர்கொண்டார். ரோஹித் சர்மாவுக்குப் பிறகு விராட் கோலி களம் இறங்கினார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பந்தில் கோஹ்லி எல்.பி.டபிள்யூ. அவுட் ஆனார். அவர் ஆறு பந்துகளை எதிர்கொண்டார். அதன் பிறகு, லோகேஷ் ராகுல் டிராவிட் மாட் ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் பிடிபட்டார். ராகுல் ஏழு பந்துகளை எதிர்கொண்டார்.

இந்த போட்டிக்கு முன்பு ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருந்தனர் என்று சொல்லலாம். ரோஹித் ஐந்து சதங்களின் உதவியுடன் ஒன்பது போட்டிகளில் 648 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 443 ரன்களும், கே.எல்.ராகுல் 361 ரன்களும் எடுத்துள்ளனர். கோஹ்லி ஒன்பது ஆட்டங்களில் ஐந்து அரைசதங்களை அடித்துள்ளார். ராகுல் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார்.

Trending News