நான் அவுட் இல்லை.. புகைப்படம் ஆதாரத்தை வெளியிட்ட ரோஹித் சர்மா

இதோ ஆதாரம்... நான் அவுட் இல்லை என புகைப்படத்தை வெளியிட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jun 28, 2019, 05:44 PM IST
நான் அவுட் இல்லை.. புகைப்படம் ஆதாரத்தை வெளியிட்ட ரோஹித் சர்மா
Pic Courtesy : Twitter

மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நேற்று நடந்த 34வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அப்பொழுது இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமர் ரோச் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தை எதிக்கொண்டார். அது ரோகித்தின் பேட் மற்றும் பேடு இடைவே கடந்து விக்கெட் கீப்பருக்கு சென்றது. இதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவுட் கேட்டனர். ஆனால் அம்பயர் அவுட் இல்லை மறுத்து விட்டார். 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ரிவியூவை கேட்டார். மூன்றாவது அம்பயர் ரிவியூ பார்த்தார். அதில் பேட் மற்றும் கால் இரண்டுக்கும் இடையில் பந்து செல்லும் போதும் அதிர்வு ஏற்பட்டது. உடனே மூன்றாவது அம்பயர் ரோகித் சர்மாவுக்கு அவுட் கொடுத்தனர். ஆனால் பந்து உண்மையில் பந்து மட்டையில் படவில்லை. "பேட்"லில் தான் பட்டது. இதனால் 

இது ரோகித் மனைவி ரித்திகா உட்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக ரசிகர்கள் பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக  வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். 

இந்நிலையில், தற்போது இதுகுறித்து இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா டிவிட் செய்து இருக்கிறார். அதில், தான் அவுட் இல்லை என்ற புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.