பாம்பு என்ற பெயரைக் கேடாலே ஒரு வித அச்சம் மனதில் சூழும். அப்படி இருக்கும் போது, பாம்பை பார்த்தால் என்ன ஆவது. தலைநகர் தில்லிக்கு அருகில் உள்ள நொய்டாவின் புகழ் பெற்ற அமிட்டி பலகலைகழகத்தில், வகுப்பறை ஒன்றில் உள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட் வழியாக பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக வகுப்பறைக்குள் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பைக் கண்ட மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினர். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி நேரத்தில் நடந்த இந்த சம்பவம் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பதற செய்தது.


சுமார் 13 வினாடிகள் கொண்ட வீடியோவில், கரு நிற பாம்பு ஒன்று ர் கண்டிஷனிங் வென்ட் வழியாக வகுப்பறைக்குள் வருவதைக் காணலாம். மாணவர்களை நோக்கி அது படம் எடுத்த நிலையில், அவர் தலை தெறிக்க ஓடி வகுப்பறையை காலி செய்தனர். பாம்பு ஏற்படுத்திய பீதியிஅனல் அங்கு இருப்பவர்கள் மத்தியில் குழப்பமும் பீதியும் காணப்படுகின்றன.


இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் வைரல் வீடியோவை கீழே காணலாம்:



 


மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், பாம்பை பாதுகாப்பாகப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு விலங்குக் கட்டுப்பாடு மைப்பிற்கு கோரிக்கை விடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால் பல மாணவர்கள் எதிர்பாராத விருந்தினரை கண்டு அதிர்ச்சியையும் பீதியையும் வெளிப்படுத்தினர்.


மேலும் படிக்க | Viral Video... என்ன கொடுமை சரவணன் இது... தன்னைத் தானே விழுங்கும் பாம்பு


இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்கள் நிகழ்கின்றன என தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் மொத்தம் 310 வகையான பாம்பு இனங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 66 விஷத்தன்மை கொண்டவையாக உள்ளதாகவும் கூறப்படுகின்றன.


பாம்பு கடித்த உடன், பாதிக்கப்பட்ட நபரின் உடல் திடீரென செயல்படுவதை நிறுத்துகிறது. 40 முதல் 45 நிமிடங்களில் நோயாளிக்கு விஷ முறிவு கொடுக்கப்படாவிட்டால், அவர் இறக்கக்கூடும. எனினும், பாம்பு கடியினால் இறப்பதை விட, அது ஏற்படுத்திய அதிர்ச்சியினால் பலர் இறப்பாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ