Viral Video... என்ன கொடுமை சரவணன் இது... தன்னைத் தானே விழுங்கும் பாம்பு

Viral Video of Snake: பாம்பு, தவளை, எலி உட்பட பல சிறிய பெரிய உயிரினங்களை சாப்பிடக் கூடியது. ஆனால் தற்போது வரலாகும் இந்த வீடியோ முற்றிலும் மாறுபட்டது. இதில் பாம்பு தன்னைத் தானே விழுங்க முயல்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 5, 2024, 12:24 PM IST
  • தற்போது வைரலாகும் பாம்பு வீடியோ
  • பாம்பு என்றால் படையே நடுங்கும்.
  • பாம்பு ஏன் தன்னைத் தானே சாப்பிட முயலுகிறது?
Viral Video... என்ன கொடுமை சரவணன் இது... தன்னைத் தானே விழுங்கும் பாம்பு title=

Viral Video of Snake: இணைய உலகம் பொழுது போக்கு அம்சமாக உள்ளது. அன்றாட டென்ஷன் விலக, பல விதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இதில் காணும் வீடியோக்கள்  சில சமயம் சிரிக்க  வைக்கின்றன,  சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் மனவருத்தை தருவதாக  உள்ளன. 

நேரில் பார்க்க அரிதான விஷயங்களை வீடியோவில் காணும் போது, நமக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்படும். அதனால் தானோ என்னவோ, பார்க்க அரிதான பாம்பின் வீடியோக்கள் மிகவும் வைரலாகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என கூறுவார்கள். நாம் நடுங்க மாட்டோமோ என்ன.  பாம்பு, தவளை, எலி உட்பட பல சிறிய பெரிய உயிரினங்களை சாப்பிடக் கூடியது. ஆனால் தற்போது வரலாகும் இந்த வீடியோ முற்றிலும் மாறுபட்டது. இதில் பாம்பு தன்னைத் தானே விழுங்க முயல்கிறது.

தற்போது வைரலாகும் பாம்பு வீடியோ ஒன்றில், பாம்பு தன்னை தானே விழுங்குவதை பார்த்து, ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாகிறது.  Nature is Amazing என்ற X தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ  லட்சக்கணக்கான வியூஸ்களை குவித்துள்ளது. பாம்பு ஒன்றை தன்னைத்தானே சாப்பிட முயன்று, கிட்டத் தட்ட அதன் வால் பகுதி முழுவதையும் விழுங்குவதை காணலாம்.

வைரலாகும் வீடியோவில் (Viral Video), பாம்பு தனது வால் பகுதியை தனது வாயில் நுழைத்து தன்னை தானே சாப்பிட முயலுவதை வீடியோவில் காணலாம். பாம்பு ஏன் தன்னைத் தானே சாப்பிட முயலுகிறது என்பது குறித்து நிபுணர்கள் கூறுகையில், மன அழுத்தம், பட்டினி அல்லது அதிக சூடான தட்பநிலை போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என  கருதுகின்றனர். 

மேலும் படிக்க | குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள் - அதிர்ச்சி வீடியோ

பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். பாம்புகள், வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ரத்தத்தை உறையவைக்கும் ராஜ நாகம்... பார்த்தாலே பீதியாக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News