சென்னை: பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரியாரின் (Periyar) பிறந்த நாளை இனி சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) சட்டசபையில் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று அவையில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின். சமூக நீதியின் அடித்தளமாக விளங்கியவர் பெரியார். இந்தியா முழுமைக்கு சமூக நீதி (Social Justice Day) பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.


ALSO READ | பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் சிலை மட்டுமா?? திராவிடர் கழகம் பதில்


இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர். அதனபடி தற்போது பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் (Sathyaraj) வீடியோ பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில்.,


பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்று அறப்பால் தந்த ஐய்யாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமைமிகு முதல்வருக்கு நன்றிகள்.


 



 


திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் திராவிடியன் ஸ்டார் ஸ்டாலின் அவர்கள் வாரணத்தின் நான்கு கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார் முழக்கங்கள் தொடர்கின்றன முயற்சிகள் வெல்கின்றன. என்று கூறியுள்ளார்.


ALSO READ | தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு! - வீரமணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR