தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு! - வீரமணி

பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு வீரமணி நன்றி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 6, 2021, 02:41 PM IST
தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு! - வீரமணி

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பில், “இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

stalin

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீரமணி வெளியிட்ட அறிக்கையில், "தந்தை பெரியார்பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு!  இனி தளபதி முக ஸ்டாலின் அவர்களை  ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’ என்றே இனி அழைப்போம், அழைப்போம்!  நமது  பாராட்டும் - நன்றியும்.  காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்புப் பெற்றுத் தரவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்வைத் தொடங்கி, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவத்திற்காகவே தனது வாழ்வையே அர்ப்பணித்தார்.

அவர்தம் ஒவ்வொரு பிறந்த நாளும் - சமூகநீதி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது வெற்றிக்கான ஒரு கூடுதல் மைல்கல். அதனை சூளுரைத்து மேற்கொள்ளும் நாளாக அறிவித்துள்ளார். நமது ஒப்பற்ற மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக் கேட்டு, பெரியார் தொண்டர்களாகிய நாம் அடையும் மகிழ்ச்சி ஊற்று வெள்ளம் பெருகி ஓடுகிறது!  வரலாற்றின் ஜீவநதியாம் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்ட அண்ணாவின், கலைஞரின், திராவிட ஆட்சி எப்படி நன்றி உணர்ச்சியின் நாயகமாகவும், மிளிர்ந்ததோ, அதேபோல, தளபதி தலைமையிலான இந்த ஆட்சி மகுடம் - மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட ஒளிவீசும் மகுடமாக சமூகநீதி பிரகடனத்தைச் செய்துள்ளது. இது காலம் காலமாக நின்று பேசும் வரலாற்றுக் கல்வெட்டாக, சிலாசாசனமாக ஒளிவீசப் போகிறது, போகிறது!  நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இனி என்றும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ என்றழைக்கப்பட வேண்டியது - வரலாற்றின், காலத்தின் கட்டளை!  நன்றி! நன்றி!! நன்றி மேல் நன்றி!! " என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு பாஜக, பாமக போன்ற கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

ALSO READ பருத்திக்கு 1 % சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News