பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் சிலை மட்டுமா?? திராவிடர் கழகம் பதில்

தமிழ்நாட்டில் போதுமென்ற அளவுக்கு பெரியாருக்கு சிலைகள் உள்ளன." பெரியார் இருந்திருந்தால் கூட இதனை விரும்பியிருக்க மாட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2021, 07:16 PM IST
  • பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் சிலை மட்டுமா?? திராவிடர் கழகம் பதில்.
  • "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) இதனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
  • திமுகவும் , நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் (Social media) கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.
பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் சிலை மட்டுமா?? திராவிடர் கழகம் பதில் title=

திருச்சியில் (Trichy) பெரியாருக்கு ரூ.100 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படும் என்ற செய்தி வந்ததலிருந்தே வரவேற்புகள் எந்தளவுக்கு அதற்கு இருக்கிறதோ அதே சமயம் ஒரு சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) இதனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதில் 100 கோடி ரூபாய் செலவில் பெரியாருக்கு சிலை வைப்போம் என்று கூறுகிறார்கள்.ஆனால் பெரியார் எதைக் கேட்டாலும் அதற்கு அவர் பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்.ஏதாவது திருமணத்திற்கு வருவதென்றாலும் கூட அவர் காசு வாங்குவார்.மேடையில் அவர் பேசும் போது ஒரு முறை யாரோ ஒரு நபர் செருப்பை எடுத்து வீசுகிறார். அதை அவர் எடுத்து வைத்துக்கண்டு
 ஒரு செருப்பை மட்டும் வைத்து என்ன செய்யப் போகிறாய் இன்னொன்றையும் வீசு! என கூறி அதையும் எடுத்து வைத்துக் கொள்கிறார்.

ALSO READ : பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி! ஓ.பி.எஸ்!

இப்படி தன் மீது வீசப்பட்ட செருப்புகளை எல்லாம் அடுக்கி வைத்து "ஜோடி அரையணா விலை என கூறி அவற்றையெல்லாம் விற்று காசாக்கி பணம் சேமித்தவர் பெரியார்.அப்படி எல்லாம் தான் சேர்த்த பணத்தை பள்ளிகள் , கல்லூரிகள் (School or colleges) ஆரம்பிப்பதற்கு உதவி செய்தார்.

இங்கே பேருந்தில் கட்டணம் இல்லாமால் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள்! அதற்கு என்ன காரணம் ?? அவர்கள் வறுமையில் உள்ளார்கள். குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள்.என்ன காரணம் ?? கைச் செலவுக்கு அவர்களுக்கு காசில்லை. அங்கும் வறுமை! அரிசியும் இலவசம் என்கிறீர்கள் அதையும் விலை கொடுத்து வாங்க அவர்களுக்கு வசதியில்லை.

இந்த நிலைமையை எல்லாம் மாற்றுவதற்கு சீர்திருத்தவாதி , முற்போக்குவாதி என பேசப்பட்ட அய்யா பெரியாருக்கு 100கோடி ரூபாய் அளவில் சிலை வைப்பது குறித்து பேசுவது எப்படியுள்ளது??

"குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோடி (Modi) சிலை வைப்பதற்கும் இங்கு பெரியாருக்கு ரூ. 100 கோடி செலவில் நீங்கள் சிலை வைப்பதற்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? அதுவும் தமிழ்நாட்டில் போதுமென்ற அளவுக்கு பெரியாருக்கு சிலைகள் உள்ளன." பெரியார் இருந்திருந்தால் கூட இதனை விரும்பியிருக்க மாட்டார். என்று சீமான் கோபமாக விமர்சித்தார்.
இதற்கிடையில் திமுகவும் , நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் (Social media) கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெரியாருக்கு 100 கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பது குறித்து திராவிடர் கழகம் (Dravidar Kazhagam) ஒரு விளக்கத்தை கூறியுள்ளனர்.

அதில் "100 கோடி ரூபாய் செலவில் பெரியாருக்கு சிலையா?? கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் இது தேவையா?? என்று  தன் மனம் போன போக்கில் தவறான தகவல்களை ஒரு சில ஊடகங்கள் திட்டமிட்டே பரப்ப ஆரம்பித்துவிட்டன.

"சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்து தற்போது ஒரு சிலர் தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப எதை , எதையோ எழுதி தங்கள் வயிற்று எரிச்சலை தீர்த்துக் கொள்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன? பெரியாருக்கு வெறும் சிலை மட்டுமல்ல! 27 ஏக்கர் பரப்பளவில் 40 அடி பீடம் 95 அடி உயர பெரியார் சிலை ,தந்தை பெரியார் ஒலி , ஒளிக் காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம் , அறிவியல் கண்காட்சி , கோளரங்கம் , பெரியார் படிப்பகம் , நூலகம் , குழந்தைகளுக்கான விளையாட்டு , பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பூங்கா , சுவையான உணவகம் , வாகன நிறுத்தத்திற்கு வசதிகளுடன் ஒப்பரிய அம்சங்கள் பூத்துக் குலுங்குவது தான் பெரியார் உலகம். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் 100 கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாக ஒரு சிலர் பிரச்சாரம் செய்வதை கழகத் தோழர்கள் பற்றாளர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

இவ்வாறு பெரியாருக்கு சிலை மட்டுமல்ல இத்தனை பயனுள்ள பல அம்சங்களுடன் பெரியார் உலகம் (Periyar uzhagam) உருவாகுகிறது! என்று திராவிடர் கழகம் விளக்கி கூறியுள்ளது.!

ALSO READ : பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவோம்.சட்டப்பேரவையில் முதல்வர் மு.க‌.ஸ்டாலின் அறிவிப்பு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

Trending News